அம்மாவை மிஸ் பண்றேன்.. அவங்க தான் மகளா பிறந்து இருக்காங்க.. ஸ்ரீதேவி உருக்கமான பேட்டி!
சென்னை: விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூன்றாவது மகளான ஸ்ரீ தேவி, அம்மாவை ரொம்ப மிஸ் செய்வதாகவும், அம்மா இல்லை என்ற எண்ணம் எனக்குள் வந்துவிடக்கூடாது என்று ப்ரீத்தா அக்காவும், அப்பாவும் என்னை தாங்கினார்கள் என்று அந்த பேட்டியில் உருக்கமாக பேசி உள்ளார். அவரின் பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது.
நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா படத்தில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், ஹீரோயினாக இயக்குனர் கதிர் இயக்கத்தில், அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்த, காதல் வைரஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்: இந்த படத்தை தொடர்ந்து, ஜீவாவுக்கு ஜோடியாக தித்திக்குதே, மாதவனுடன் பிரியமான தோழி, தனுஷ் ஜோடியாக தேவதையை கண்டேன் போன்ற படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இவர் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்தார். சினிமாவில் பிஸியாக நடித்த வந்த ஸ்ரீதேவி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு, திரையுலகில் இருந்து முழுமையாக விலகினார். நீண்ட நாட்களுக்கு பிறகும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வருகிறார்.
அன்பு மகள்: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நான் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போது தான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால், திருமணத்திற்கு பிறகு குழந்தையை பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு எனக்கு இருந்ததால், நடிப்பதை நிறுத்திவிட்டேன். என் மகள் கோபிகா பேசுவது, நடந்து கொள்வது எல்லாம் என் அம்மா மாதிரியே இருக்கும். என் அம்மா தான் எனக்கு மகளாக பிறந்து இருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். அவங்க அடிக்கடி நான் திரும்ப வருவேனு சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அது நடந்து விட்டது. அம்மா என் கூடவே இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.
அம்மாவை பிஸ் பண்றேன்: என் அம்மாவை நான் மிஸ் பண்ணாத நாளே இல்லை, ஒவ்வொரு நாளும் நான் அம்மாவை மிஸ் பண்றேன். அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எனக்கு குழந்தை பிறந்த பிறகு, என் அம்மா இல்லாததையும் வெறுமையையும் நான் உணர்ந்து வருத்தப்பட்டேன். ஆனால், எனக்கு ஒரு நல்ல குடும்பம் உள்ளது, என் சகோதரி ப்ரீத்தா, எனக்கு கிடைத்த அம்மா. எங்கள் வீட்டில் அம்மா இறந்த போது, ப்ரீத்தா எங்களுக்கு அம்மாவாக மாறி வீட்டை வழிநடத்தினார்.
அதேபோல, என் அப்பா தான் என் உலகம், அவர் அம்மா இறந்த பிறகு ஒரு அம்மாவாக மாறி என்னை தாங்கினார். அம்மா இல்லை என்ற எண்ணம் எனக்குள் வந்துவிடக்கூடாது என்று அனைவருமே என்னை தாங்கினார்கள். இதனால், என் அப்பா, என் மகள் கோபிகா இருவருமே என் கண்கள் என்று நடிகை ஸ்ரீதேவி அந்த பேட்டியில் உருக்கமாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











