தொகுப்பாளர் மீது கோபம்.. நேர்க்காணலின் போது மைக்கை கழட்டி வீசிச் சென்ற பிரபல நடிகை.. பகீர் புரமோ!

Recommended Video

SRUSHTI TANGEY FIRED THE ANCHOR-PROMO | RAJAVUKKU CHECK | FILMIBEAT TAMIL

சென்னை: நடிகை சிருஷ்டி டாங்கே ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த நேர்காணலின் போது கோபப்பட்டு மைக்கை கழட்டி வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சிருஷ்டி டாங்கே காதலாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் தர்மதுரை படத்தில் மருத்துவ மாணவியாக ஸ்டெல்லா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் சிருஷ்டி டாங்கே. கலகலப்பான அவரது அந்த கதாப்பாத்திரம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ராஜாவுக்கு செக்

ராஜாவுக்கு செக்

இந்நிலையில் சத்ரு, பொட்டு உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார் சிருஷ்டி டாங்கே. அண்மையில் இயக்குநரும் நடிருகமான சேரனுடன் இணைந்து ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ராஜாவுக்கு செக் படம்.

லிப் டூ லிப் முத்தம்

லிப் டூ லிப் முத்தம்

இந்நிலையில் நடிகை சிருஷ்டி டாங்கே ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு நேர்க்காணல் அளித்தார். அப்போது பிலிமி பீட் தொகுப்பாளர் ராஜாவுக்கு செக் படத்தில் ஹீரோவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது குறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோவால் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

மைக்கை கழட்டிவிட்டு

மைக்கை கழட்டிவிட்டு

இதனால் கடுப்பான நடிகை சிருஷ்டி டாங்கே மைக்கை கழட்டி எறிந்து விட்டு எழுந்து சென்று விட்டார். இந்த புரமோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதன் முழு நிகழ்ச்சியும் விரைவில் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் தளத்தில் வெளியாக உள்ளது.

போட்டோ ஷுட்

நடிகை சிருஷ்டி டாங்கே கைவசம் எந்தப் படமும் இல்லாமல் உள்ளார். பட வாய்ப்புக்காக வித விதமாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். மேலும் அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என தனது சமூக வலைதள பங்கங்களிலும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அவர் வெளியிடும் போட்டோக்கள் அவ்வப்போது வைரலாவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X