போலீஸ் கிட்ட Training எடுத்தேன்..ஸ்ருதி ஹரிஹரனின் சுவாரஸ்ய பேட்டி!
சென்னை: பிரபல கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் நடிப்பில் வெளிவந்துள்ள வெப் தொடர் "வதம்".
தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ள நடிகையாக சினிமா துறையில் சிறந்து விளங்குகிறார்.
க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் வதம் வெப் தொடரில் நடித்த அனுபவங்கள் குறித்து இயக்குனருடன் சேர்ந்து பேசியுள்ளார் ஸ்ருதி ஹரிஹரன்.

நல்ல வரவேற்பு
OTT ரிலீஸ் என்பதால் எந்த வித டென்ஷனும் இல்லாமல் படப்பிடிப்பை முடித்தோம். ட்ரைலரை தொடர்ந்து தொடருக்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தொடரின் இயக்குனர் வெங்கடேஷ் பாபு கூறியுள்ளார்.

காவல் நிலையம்
வதம் பெண் காவலர்கள் குறித்த கதை என்பதால் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று, அங்குள்ள காவலர்களுடன் பேசி, வதம் தொடருக்கு தேவையானவற்றை பார்த்து தெரிந்து கொண்டதாகவும் பேட்டியளித்துள்ளார் ஸ்ருதி ஹரிஹரன்.

பார்க்க காரணம்
காவல் துறையில் உள்ள பெண்கள் சந்திக்கும் சூழ்நிலை, அவர்களின் அசாதாரணமான செயல்கள், அதெல்லாம் தாண்டி எவ்வாறு வெற்றி பெறுகிறார்கள் என்ற விஷயத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வதம் தொடரை பார்க்கவேண்டும் என கூறியுள்ளார் இயக்குனர்.

MX Player ல் இலவசம்
வதம் வெப் தொடரை MX Player எனும் OTT தளத்தில் ரசிகர்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இலவசமாக காணலாம். வதம் வெப் தொடர் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











