தூறல் நின்னு போச்சு சுலக்‌ஷனாவை ஞாபகம் இருக்கா.. சிவகுமார் இப்படியெல்லாம் அவரை திட்டியிருக்காரா!

சென்னை: தூறல் நின்னுப்போச்சு, சிந்து பைரவி, தூங்காதே தம்பி தூங்காதே, தம்பிக்கு எந்த ஊரு என பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை சுலக்‌ஷனா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிவகுமார் தன்னை எப்படியெல்லாம் திட்டுவார் என்பது குறித்தும் நடிகர்கள் தனக்கு ஐ லவ்யூ சொல்வதையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

60 வயதை நெருங்கி உள்ள மூத்த நடிகை சுலக்‌ஷனா குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் படங்களிலேயே நடித்துள்ளார். 1968ம் ஆண்டு வெளியான துலாபாரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் சுலக்‌ஷனா. தொடர்ந்து காவிய தலைவி, புதிய வாழ்க்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளர்.

Actress Sulakshana reveals many secrets about Sivakumar

பான் இந்தியா நடிகை: அப்போதே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் ஒரு படம் என பான் இந்தியா நடிகையாக வலம் வந்தவர் சுலக்‌ஷனா. 1982ல் பாக்கியராஜ் இயக்கி நடித்த தூறல் நின்னுப் போச்சு படத்தில் ஹீரோயினாக நடித்த சுலக்‌ஷனா சின்னஞ் சிறுசுகள், இன்று நீ நாளை நான், தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, ஆயிரம் நிலவே வா, ராஜ தந்திரம், பொய் முகங்கள், ராஜ ரிஷி, மருதாணி, விலங்கு, கதா நாயகன், வைகாசி பொறந்தாச்சு, சின்ன தம்பி, தம்பி பொண்டாட்டி, கடைசியாக ஆர்யா நடித்த கஜினிகாந்த் என பல படங்களில் நடித்துள்ளார். இதை போல பல்வேறு மொழிகளிலும் நடித்து பிரபலமானவர்.

நடிகர்கள் ஐ லவ்யூ சொல்வாங்க: நடிகர்கள் எல்லாம் தன்னை பார்த்தால் ஐ லவ்யூ சொல்வார்கள். பலருக்கும் நான் ஃபேவரைட்டான நடிகை. சிவாஜி அப்பா, ஜெமினி கணேசன் சார் எல்லாம் ரொம்பவே அன்போடு என்னிடம் பேசுவார்கள். நடிகைகளிடம் ஈகோ காட்டியதே இல்லை. எனக்கு எப்போதுமே கோபம் வராது என அழகாக பேசுகிறார். சில படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இவர் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அவங்க பொழப்புல மண்ணை அள்ளிப் போட விரும்பல: புன்னகை மன்னன் படத்தில் ரேவதிக்கும் நான் தான் டப்பிங் பண்ணேன். அதே போல டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி படத்தில் அமலாவுக்கும் டப்பிங் பண்ணேன். உஷா என்னோட க்ளோஸ் ஃபிரெண்ட் அவ கேட்டுக்கிட்டதால அந்த படத்துக்கு டப்பிங் பேசினேன். நான் புரொஃபசனல் கிடையாது. டி. ராஜேந்தர் பட்டறையில் தமிழ் சுத்தமா பேச வேண்டும். ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பையும் அவர் ரொம்பவே உற்று நோக்குவார். கொஞ்சம் தப்பு பண்ணினாலும் திட்டுவார். தொடர்ந்து டப்பிங் பேச ஆரம்பித்த நிலையில், டப்பிங் யூனியனில் இருந்த சிலர் பிரச்சனை பண்ண ஆரம்பித்தனர். அவங்க பொழப்புல நாம ஏன் மண்ணை அள்ளிப் போடணும்னு அதை அப்படியே விட்டு விட்டேன் என்றார்.

பண்ணாடன்னு திட்டுவார்: இன்று நீ நாளை நான், சிந்து பைரவி உள்ளிட்ட 4 படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். அவர் எப்போதும் என்னை பார்த்தால் தத்தி என்றும் பண்ணாட இங்க வா..ன்னு செல்லமா திட்டுவார். அது ஏன் என்றே எனக்குத் தெரியாது. ஆனால், மற்ற நடிகர்கள் போல அவர் இல்லை. எப்போதுமே மற்ற நடிகர்கள் நம்மை விட யாரும் அதிகம் ஸ்கோர் செய்து விடக் கூடாது என்றே நடிப்பார்கள். ஆனால், இவர் சரிசமமாக வசனம் எல்லாம் சொல்லிக் கொடுத்து நல்லா நடின்னு ஊக்கப்படுத்துவார் என அந்த பேட்டியில் சிவகுமார் பற்றி தெரியாத பல விஷயங்களை பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X