எனக்கும் கல்யாணம் நடக்கும்-சுஷ்மிதா விரக்தி

By Sudha

Sushmitha Sen
நானும் ஒரு நாள் கல்யாணம் செய்வேன் என்று விரக்தியுடன் கூறியுள்ளார் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அழகி சுஷ்மிதா சென்.

இந்தியாவுக்கு முதல் முறையாக மிஸ்யுனிவர்ஸ் பட்டத்தை வென்று கொடுத்தவர் சுஷ்மிதா சென். அதன் பிறகுதான் ஐஸ்வர்யா ராய் அழகியானார். ஆனால் ஐஸ்வர்யாவை விட சுஷ்மிதா சென் திரையுலகில் புகழ் பெறவில்லை. ஐஸ்வர்யாவின் அழகு அலையில் சுஷ்மிதா சென் கரைந்து போய் விட்டார்.

34 வயதாகும் சுஷ்மிதா சென் இதுவரை கல்யாணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா கல்யாணம் குறித்து பேசுவதே இல்லை. அப்படியே கேட்டாலும் விட்டேற்றியாகவே பேசுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பெண்கள் 23, 24 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அது தான் சரியான வயது என்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படிப்பட்ட எண்ணம் ஏற்பட்டதே இல்லை.

நான் நிச்சயம் என்றாவது ஒருநாள் திருமணம் செய்து கொள்வேன். எனக்குப் பிடித்த ஆணை தேடி வருகிறேன்.

16 ஆண்டுக்கு முன்பு நான் உலக அழகிப்பட்டம் வென்றேன். தற்போது எல்லா நடைமுறைகளும் மாறி விட்டது. அதற்கு ஏற்ப வாழ வேண்டியுள்ளது.

மக்களிடம் புகழ் பெற வேண்டும் என்பது எனக்குள் எப்போதுமே இருக்கும் ஆசையாகும். வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு லட்சியம்தான் உள்ளது.
முகம் தெரியாத மனிதர்கள் கூட எனக்காக அழ வேண்டும் என்று கூறியுள்ளார் சுஷ்மிதா.

கல்யாணம் செய்து கொள்வதில்தான் சுஷ்மிதா ஆர்வம் இல்லாமல் இருக்கிறாரே தவிர காதலில் அவர் ஒரு குறைவும் கண்டதில்லை. பலருடனும் இணைத்து பேசப்பட்டவர் அவர். கடந்த காலங்களில் 3 பேருடன் இணைத்துப் பேசப்பட்டார். அவர்களில் வாசிம் அக்ரமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X