twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாய் பல்லவி நல்லா டான்ஸ் ஆடுறாங்க.. ஒடிடிக்கு சென்சார் முக்கியம்.. நடிகை ஸ்வர்ணமால்யா பேட்டி!

    |

    சென்னை: நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஸ்வர்ணமால்யாவின் பேட்டி 3 பாகங்களாக வெளியாகி உள்ளது.

    பரதநாட்டியம் குறித்தும், அலைபாயுதே படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் ஒடிடி தளங்களுக்கு சென்சார் என ஏகப்பட்ட விஷயங்களை ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டின் க்ளோஸ் கால் பேட்டியில் பகிர்ந்துள்ளார் ஸ்வர்ணமால்யா.

    Actress Swarnamalya talks about Sai Pallavi and Bharatanatiyam in her interview!

    தனது 17 வயதிலேயே யுவகலா பாரத் விருதை பெற்றவர் ஸ்வர்ணமால்யா. சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமான இவர், ஏகப்பட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 2000ல் வெளியான அலைபாயுதே படத்தில் நடிகை ஷாலியின் சகோதரியாக நடித்து அசத்தினார்.

    அதன்பின்னர் விஜயகாந்தின் எங்கள் அண்ணா, சாரி எங்களுக்கு கல்யாணமாகிடுச்சு, யுகா, மொழி, பெரியார், வெள்ளித்திரை, இங்க என்ன சொல்லுது மற்றும் புலிவால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு முனைவர் பட்டம் பெற்றுள்ள அனுபவத்தையும் தனக்கு சைனீஷ் உணவு வகைகளை சமைப்பதில் ஆர்வம் என்றும் பகிர்ந்துள்ளார்.

    சினிமாவில் நடனமாடுவதில் லேட்டஸ்ட்டாக நடிகை சாய் பல்லவி நல்லா டான்ஸ் ஆடுகிறார் என்று அவரை பாராட்டியுள்ளார்.

    ஒடிடி தளங்கள் குறித்த கேள்விக்கு, அவற்றுக்கு நிச்சயம் சென்சார் தேவை என்றும், கலாசாரத்தை சீரழிக்கும் விசயங்களை ஊக்குவிக்க கூடாது என்றும் பேசியுள்ள மூன்று பாகங்களையும் கண்டு ரசியுங்கள்!

    English summary
    Actress Swarnamalya talks about Sai Pallavi, Censor for OTT and Bharatanatiyam in her close call Interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X