ரீல்ஸ் எங்க பொழப்பை கெடுக்குது.. நடிப்பு திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பில்ல.. வடிவுக்கரசி ஆதங்கம்!
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான வடிவுக்கரசி, ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர். ரீல்ஸ் எடுப்பவர்களை சீரியலில் நடிக்க வைக்கிறார்கள். அவர்களால், நடிப்பு திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை என பேசி உள்ளார்.
தமிழ் பேஷன் சகா நிகழ்ச்சி கோயம்பேட்டி உள்ள ஸ்கை ஒன் மாலில் நடைபெற்றது. இதில், பேசிய வடிவுக்கரசி, ஒரு லட்சம் பாலோவர்ஸ் இருக்காங்க, 10 லட்சம் பாலோவர்ஸ் இருக்காங்க என்று சொல்லி ரீல்ஸ் செய்பவர்களை சீரியலில் நடிக்க ஒப்பந்தம் செய்து விடுகிறார்கள். பெரிய பெரிய நடிகர்கள் நடித்த சினிமா பாடலுக்கு வெறும் வாயை மட்டுமே அசைத்து ஆட்டம் போட்ட அவர்கள் படப்பிடிப்பு தளத்தில், அவர்களுக்கு என்று தனியாக டயலாக்கை கொடுத்து பேச சொல்லும் போது அவர்களால் பேச முடியவில்லை திணறுகிறார்கள். இதனால் எல்லோருடைய நேரமும் வீணாகிறது, கூடவே பணமும் வீணாகிறது. இதனால், நடிப்பு திறமையுள்ள நிஜமான நடிகர்கள் வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள் என்று வடிவுக்கரசி ஒரு பேட்டியில் கூறுகிறார்.

எங்க பொழப்பே போச்சு: ரீல்ஸ் என்பது அவர்களின் பொழுது போக்குக்காக செய்யும் விஷயம் , அதை சினிமாவோடு ஒப்பிடக்கூடாது. ஐந்து வெற்றிப்படத்தை கொடுத்தாலும் ஆறாவது ஒரு தோல்வித் திரைப்படமாக அமைந்துவிட்டால், பிறகு அந்த நடிகருக்கு சினிமாவில் வாய்ப்பு இருக்காது. பின் அவர் மீண்டும்,பழைய இடத்திற்கு வர படாதபாடு பட வேண்டி இருக்கு, இப்படி இருக்கும் நிலையில் ரீல்ஸ் பண்றவங்களை கூட்டிட்டு வந்து நடிக்க வெச்சா அவங்களுக்கு பின்னாடி எப்படி வாய்ப்பு கிடைக்கும். இதனால், ரீல்ஸ் பார்த்தோமா ரசித்தோமா என்று தான் இருக்க வேண்டும்.
கம்பேனி கம்பேனியாக: முன்பெல்லாம் போட்டோவை ஆல்பமாக போட்டுக் கொண்டு, படவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குவார்கள். அதன்பின் நாடகத்தில் நடிப்பார்கள், நாடகத்தில் நடித்த பிறகு சினிமாவில் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால், எப்போதெல்லாம் சீரியலில் ரிலீஸை பார்த்துவிட்டு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதை நான் தவறாக சொல்லவில்லை. ரீலிஸ் எடுப்பது எப்படி உங்களது பொழுதுபோக்காக இருக்கிறதோ. அதேபோல, சீரியலில் நடிப்பதையும் ஒரு பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டு, ஒரு நல்ல வேலையை செய்து கொண்டே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து என்றார்.

கௌரவமான உடை: இதைத்தொடர்ந்து,பெண்கள் கவர்ச்சியாக ஆடை அணிவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவுக்கரசி, இன்றைய காலத்துக்கு மாணவர்கள் அனைவருமே புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் எதையும் சொல்லித் தர தேவையில்லை. இருந்தாலும் பெற்றோர்கள் சில விஷயங்களை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். குறிப்பாக ஆடை விஷயத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பார்த்து அருவருக்கும் வகையிலோ அல்லது கைத்தட்டி அழைக்கும் வகையிலோ நம்மளுடைய ஆடைகள் இருக்கக்கூடாது. நம்மைப் பார்த்து யாரும் கையெடுத்து கும்பிடவில்லை என்றாலும், நம்மை பார்த்து நம்ம வீட்டுப் பெண் என்று நினைக்கும் அளவிற்கு பெண்களின் ஆடைகள் இருக்க வேண்டும். ஆபாசமான ஆடையை அணிந்து, அவர்களின் ஆசையை தூண்டிவிட்டு பின், அவன் அங்கே தொட்டான், இங்கே தொட்டான் என்று சொல்வதில் நியாமே இல்லை என்று வடிவுக்கரசி அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











