முத்தக் காட்சியை விடுங்க.. முதல்ல அதை எப்படி பண்ணப் போறோம்னே தெரியல.. வைபவி சாண்டில்யா பேட்டி!
சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து ஹீரோயின் வைபவி சாண்டில்யா, இந்த லாக்டவுனில் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் அறிமுகமாக வேண்டிய வைபவி சாண்டில்யா, அந்த படத்தின் ரிலீஸ் பிரச்சனை காரணமாக, இருட்டு அறையில் முரட்டு குத்து, சக்கப் போடு போடு ராஜா, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த லாக்டவுன் பேட்டியில் தனக்கு பிடித்த தமிழ் சினிமா நடிகர்கள், லாக்டவுனுக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது என பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.
நடிகர் சூர்யாவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், சூர்யா, ஜோடி சூப்பர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் குறித்தும் இந்த பேட்டியில் விரிவாக பேசியுள்ளார்.
முத்தக் காட்சிகள் உள்ளிட்ட ரொமான்ஸ் காட்சிகளில் எப்படி நடிக்கப் போறீங்க என்ற கேள்விக்கு, அதை விடுங்க பாஸ் முதலில், ஷூட்டிங் போனால், மேக்கப் போடுவது, ஹேர் டிரெஸ்ஸிங் பண்ணுவது என நம்மை சுற்றி 5 முதல் 6 பேர் நமக்கு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை டச்சப் செய்வார்கள், அதையெல்லாம் சினிமா உலகம் எப்படி சமாளிக்கப் போகிறது என்று நினைத்தால் தான் என பெருமூச்சு விடுகிறார்.
மும்பையில் இருந்து வீடியோ கால் மூலம் பேட்டியளித்துள்ள வைபவி சாண்டில்யா தனது அடுத்த படங்கள் குறித்தும், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார், அவரது முழு பேட்டியை கண்டு மகிழ வீடியோவை க்ளிக் பண்ணுங்க!


Click it and Unblock the Notifications











