Vanitha: கல்யாணம் பண்ணது ரொம்ப தப்பு.. மகள்கள் முன், மனம் வருந்தி பேசிய வனிதா விஜயகுமார்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தற்போது, Mrs & Mr என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து இருக்கிறார். அதில் ராபர்ட் மற்றும் வனிதா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், வனிதா தனது மகள் ஜோவிகா மற்றும் ஜெனித்தாவுடன் பேட்டி அளித்துள்ளார். அதில் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
ஒரு சிங்கிள் மதராக இரண்டு பெண் குழந்தைகளை வளர்ப்பது என்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக தான் இருந்தது. நான் துவண்டு போன நேரங்களில் எல்லாம் என்னுடைய இரண்டு மகள்களை பார்த்து, என்னை நானே தேற்றிக்கொண்டேன். என்னுடைய பலமே என்னுடைய மகள்கள் தான். அது மட்டும் இல்லாமல் எனக்கு குடும்பத்தின் சப்போர்ட் இல்லாதது மிகப் பெரிய வலியாக இருந்தது. இதுபோன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். ஒரு பெண்ணுக்கு கணவன் என்பது மிகப்பெரிய பலம் அது என் வாழ்க்கையில் இல்லை. அதே போல என்னுடைய குடும்ப உறவுகளும் எனக்கு பக்க பலமாக இல்லை. ஆனால், என்னுடைய நண்பர்கள் எனக்கு பக்க பலமாக இருந்தார்கள். அதற்காக கடவுளுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

கல்யாணம் பண்ணது தப்பு: எனக்கு என்னுடைய மகளுக்கும் இடையில் எந்தவிதமான ஒளிவு மறைவுமே கிடையாது. நான் என்ன செய்வதாக இருந்தாலும் அதை என் மகளிடம் சொல்லிவிடுவேன். ஏனென்றால், சின்ன வயதில் நாம் தவறுகளை செய்து அப்பா அம்மாவிடம் அடி வாங்கி இருப்போமே. அதையேதான் இவர்களும் செய்யப்போகிறார்கள். எனக்கு ஒரு ரூல், என் குழந்தைகளுக்கு ஒரு ரூல் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை. அவர்களை எப்போதுமே அவர்களின் போக்கில் விட்டு விட்டு, தள்ளி நின்று கண்காணித்துக் கொண்டுதான் இருப்பேன்.
ஆனால், என்னுடைய வீட்டில் என்னுடைய பெற்றோர்கள் ஃபிரண்டாக நடந்து கொள்ளவில்லை. இதனால் எனக்கு எப்போடா கல்யாணம் நடக்கும், இங்கிருந்து எப்போடா போவோம் என்று தான் தோன்றியது. அதனால் தான், நான் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் உணர்கிறேன். இதனால், நான் என் மகள் விஷயத்தில் வெளியாக இருக்கிறேன் என்று வனிதா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

இரண்டு மகள்கள்: பழம் பெரும் நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்தனர். பின் சில காரணங்களால் வனிதா அவரை 2007ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதையடுத்து, 2007 ஆம் ஆண்டே தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது கணவருடன் வனிதாவிற்கு ஜெனித்தா. பின் 2012ம் ஆண்டே விவாகரத்து பெற்று பிரிந்தார். தனது இரு மகள்களையும் தன்னுடனே வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் அவரது இரண்டாவது கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது மகளை தன்னுடன் வைத்திருக்கிறார். அப்போது ஜெனித்தா ஹைதராபாத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











