பிரபுதேவா மேல கிரஷ்.. 30 வருஷமா நான் யாரையும் சார்ந்து வாழல.. வனிதா அதிரடிப் பேட்டி!

சென்னை: வைரல் ஸ்டாராக வலம் வரும் நடிகை வனிதா விஜயகுமார், சூர்யன் எஃப் எம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சினிமாவில் நடிக்க வந்தது, முதல் க்ரஷ், திருமணம் என பல விஷயம் குறித்து பேசி உள்ளார்.

அதில்,என்னுடைய 20 வயது வரை நான் மற்றவர்களுக்காகத்தான் வாழ்ந்து இருக்கிறேன். என்னுடைய மகன் விஜய் ஸ்ரீ பிறக்கும்போது எனக்கு 19 வயதுதான். அவன் எனக்குக் கடவுளாகப் பார்த்து அனுப்பி வைத்த குழந்தை என்றுதான் நான் இப்போதும் நினைக்கிறேன். மகனுடன் அவன் 8 வயது ஆகும் வரை மட்டுமே நான் இருக்க முடிந்தது, அதன் பிறகு அவன் என் வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டான். அவன் விலகிய பிறகு என் மகள்கள் ஜோவிகா, ஜெனிதா இருவருமே எனக்குப் பக்கபலமாக நின்றார்கள். பாகுபலி போல எனக்குப் பின்னால் அரணாக இருந்தார்கள். சோசியல் மீடியாவில் நான் ஏதாவது ஒரு போட்டோவைப் போட்டால் மோசமான பல கமெண்டுகள் வரும். அதை என் மகள்கள் கூட இப்போது மிகவும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

வனிதா பேட்டி: இப்படி கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் முகத்தை மூடிக்கொண்டு, தங்களுடைய அடையாளத்தை முழுமையாக அழித்துவிட்டுத்தான் செய்கிறார்கள். இவளையெல்லாம் கேள்வி கேட்க ஆளில்லை, சிங்கிளாக ஜாலியாக இருக்கிறாள் எனப் பலர் என்னைப்பற்றி நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அது இல்லை, நம்மை கேள்வி கேட்க யாருமே இல்லை என்று நினைக்கும் போதுதான் மனசு மிகவும் வலிக்கும், நம்மை கேள்வி கேட்கவும் ஆள் இருக்க வேண்டும் என்றார்.

பிரபுதேவா மேல கிரஷ்: தொடர்ந்து சினிமாவிற்கு வந்தது பற்றி பேசிய வனிதா, நான் நடிக்க வருவேன் என்று வாழ்க்கையில் எதிர்பார்க்கவே இல்லை. 14 வயதில் நான் நடிக்கப் போகிறேன் என்று சொன்னபோது என் வீட்டில் உள்ள யாருமே நம்பவில்லை. நான் நடிக்க வந்ததே ஒரு ஆக்சிடென்ட் தான். அந்த நடிப்பு ஆசை வந்ததற்கு முக்கியக் காரணமே பிரபுதேவா தான். 'காதலன்' படத்தில் அவருடைய அசாத்தியமான டான்ஸ் மற்றும் நடிப்பைப் பார்த்து அவர் மீது எனக்குப் பெரிய க்ரஷ் வந்துவிட்டது. அந்த நேரத்தில் தான் எனக்கு சந்திரலேகா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. எப்படியாவது நடிகையாகி பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அந்தப் படத்தில் நடித்தேன். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் எனக்கு நடிப்பு ஆசை போய்விட்டது. பின்னர் திருமணம் செய்துகொண்டு குழந்தை குட்டிகளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

Vanitha interview
Photo Credit:

வனிதாவின் அட்வைஸ்: 14 வயதில் உழைக்கத் தொடங்கினேன் இப்போது 46 வயதாகிறது. இந்த வயதிலும் கடந்த 30 வருடமாக நான் தொடர்ந்து வேலை செய்துகொண்டு தான் இருக்கிறேன். இந்த 30 ஆண்டு காலத்தில் நான் என் பெற்றோரையோ, கணவரையோ அல்லது பாய் ஃபிரண்டையோ சார்ந்து வாழவில்லை. என் குழந்தைகளுக்கும் இதையேதான் சொல்லி வளர்த்திருக்கிறேன். யாரையும் டிபென்ட் பண்ணி நாம் இருக்கக் கூடாது. நாம் சொந்தக் காலில் நின்று சம்பாதிக்க வேண்டும் அப்படி நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தில் ஜாலியாகச் செலவு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று வனிதா அந்தப் பேட்டியில் மிகவும் போல்டாகப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X