இளையராஜா வீட்டிற்கு மருமகளா போக வேண்டியவள்.. அந்த குடும்பத்தில் ஒருத்தி நான்.. தேம்பி அழுத வனிதா!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், இயக்கிய "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் இளையராஜாவின் 'மைக்கல் மதன காமராஜன்' படத்தில் வரும் சிவராத்திரி பாடலை பயன்படுத்தியதற்காக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய வனிதா, நான் அந்த வீட்டு பொண்ணு என்கிட்டையே இப்படியா என தேம்பி தேம்பி அழுதார்.
வனிதா விஜயகுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இதில், ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, ஸ்ரீமான், பாத்திமா பாபு, செஃப் தாமு, கிரண், ஆர்த்தி, கணேஷ் என அனைவரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இதை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்தப்படம், நேற்று தியேட்டரில் வெளியானது.

மிஸஸ் அண்ட் மிஸ்டர்: நேற்று முன் தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இப்படத்தில் சிவராத்திரி பாடலை பயன்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த வனிதா, நாங்கள் பயன்படுத்தியுள்ள பாடல், சோனி மியூசிக் இடம் தான் உரிமம் உள்ளது. எனவே நாங்கள் அவர்களிடம் பணம் கட்டி பாடலுக்கான உரிமத்தை வாங்கி உள்ளோம். எனவே எங்களுக்கு பயம் இல்லை. அப்படி ஒருவேளை பாடலைப் பயன்படுத்தியதற்கு வழக்கு தொடுத்தால் அதையும் எதிர்கொள்ளத் தயாராக தான் இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, சிவராத்திரி பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இல்லையேல் நஷ்டஈடு கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
நான் தாங்க முடியல: இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார், நான் இளையராஜா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று அவரிடம் இது குறித்து பேசினேன், அவர் ஓகே என்பது தான் சொன்னார். இதைத்தான் நான் பல பேட்டிகளிலும் கூறி இருந்தேன். அவர் ஒரு லெஜெண்ட், இசையின் கடவுள் அவர், கடவுளே நம்மிடம் கோபித்துக் கொண்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் மனது. சிறு வயதிலிருந்து நான், அவருடைய வீட்டில் வளர்ந்து இருக்கிறேன். சில விஷயங்களை வெளியில் சொன்னால் கஷ்டமாகிவிடும் அதை சொன்ன விரும்ப வில்லை.
தேம்பி அழுத வனிதா: சோனி மியூசிக்கிடம் உரிமம் வாங்கி இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, அந்த சோனி மியூசிக் மீது தான் வழக்கு போட வேண்டும். அப்படித்தான் குட் பேட் அக்லி, மஞ்சுமல் பாய்ஸ் போன்ற பல படத்திற்கு வழக்கு போட்டு உள்ளார். ராஜா அப்பா ஒரு பேட்டியில் எனக்கு மரியாதை கொடுத்து அனுமதி வாங்கிவிட்டால் போதும், எனக்கு பணம் கூட வேண்டாம் என்று சொன்னார். அதைத்தான் நான் செய்தேன். ஏன் என்றால், அந்த வீட்டில் நான் பூஜை செய்து இருக்கிறேன். ஜீவா அம்மாவிடம் இருந்து லாக்கர் சாவியை வாங்கி அதில் இருந்த நகையை எடுத்து, சாமிக்கு போட்டு பூஜை செய்து இருக்கிறேன். அந்த குடும்பத்திற்காக நான் அவ்வளவு செய்து இருக்கிறேன். அந்த குடும்பத்திற்கு மருமகளாக போக வேண்டியவள் நான் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என தேம்பி அழுத படி, பத்திரிக்கையாளரை இடித்து தள்ளிவிட்டு சென்றார் நடிகை வனிதா விஜயகுமார். படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழுவினர் இளையராஜாவிற்கு நன்றி கார்டு போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











