என் பொண்ணு பண்றது தப்பா.. நீயே ஒரு சாக்கடை.. மோசமான கேள்விக்கு வனிதா பதில்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் கதை எழுதி, நடித்து இயக்கிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் ஜூலை 11ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ராபர்ட், ஷகிலா, ஆர்த்தி கணேஷ், கிரண், பாத்திமா பாபு ஆகியோர் நடத்துள்ளனர். இந்த படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான ப்ரொமோஷனில் கலந்து கொண்டு பல விஷயம் குறித்து பேசி வருகிறார்.

Rednool யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த வனிதா, படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில், என் வாழ்க்கையில், ஜோவிகா என் வயிற்றில் இருக்கும் போது, நடந்த சில கஷ்டமாக விஷயத்தை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறேன். இந்த படத்தில் ஷகீலா அவர்கள் ஒரு வசனம் பேசி இருப்பார்கள். அதாவது, பெண்கள் அனைத்து விஷயத்திலும் தைரியமாக இருப்பார்கள். ஆனால், கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு அம்மாவை விட, கணவனின் அரவணைப்பு தான் தேவை என்று சொல்லி இருப்பார்கள். அதை தான் நானும் சொல்ல வருகிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவனுடைய அரவணைப்பு நிச்சயம் தேவை. அது அமையாத பட்சத்தில் என்ன மாதிரியான வலிகளை பெண்கள் சந்திக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறேன்.

Mrs amp amp Mr Vanitha Vijayakumar amp amp
Photo Credit:

வனிதா பதில்: பின் ரசிகர்களின் கேள்விக்கு வனிதா பதிலளித்தார். அதில், ஒருவர் ஜோவிகாவின் பணத்தை வீணாக்கி, இதுபோல ஒரு பிட்டு படத்தை எடுக்கலாமா? இந்த படத்தை எப்படி குடும்பத்துடன் சென்று பார்ப்பது என கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த வனிதா, உங்களின் மகள் பணத்தை வாங்கி நான் செலவு செய்யவில்லை. இதற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, படத்தை பார்த்தால் பாருங்கள் இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள். இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் குடும்பத்தோடு பார்க்காதீர்கள். குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு கணவன் மனைவி மட்டும் வந்து ஜாலியாக படத்தை பாருங்கள் என்றார்.

என் மகள் பண்ணா தப்பா: நல்ல தாயாக தேவயானி இருக்கிறார்.. மோசமான அம்மாவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகை வனிதா, இந்த கேள்வியில் எந்த விதத்தில் நியாயம் இருக்கிறது. தேவயானி மகள் மேடையில் பாட்டு பாடுகிறாள், என் மகள் மேடையில் நடனமாடலாம், நடிக்கலாம் என் மகள் செய்தால் மட்டும் தப்பா. அவளுக்கு அதில் விருப்பமாக இருக்கிறது செய்கிறிள். தேவயானிக்கு இரண்டு மகள் இருக்கிறார்கள். மற்றொரு பெண் நடிகையாக கூட ஆகலாம். அதே போல எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

சாக்கடைத்தனமான கேள்வி: எதற்கு தேவையே இல்லாமல் எங்கள் இருவரையும் கம்பேர் செய்கிறீர்கள். என்னைப் பற்றியும் தேவயானை பற்றியும் இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு எங்களைப் பற்றியும் எங்களின் குடும்ப வாழ்க்கை பற்றியும் என்ன தெரியும்? இந்த கமெண்ட்கள் எல்லாம் படித்தால் தேவயானியே சிரிப்பார்கள். நியாயமான கேள்வியாக இருந்தால் நிச்சயமாக அந்த கேள்விகளுக்கு நான் பதில் அளித்து இருப்பேன். ஆனால், ஆபாசமாகவும், மோசமாகவும், சாக்கடைத்தனமான கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது என்று வனிதா அந்த பெயரில் கொந்தளித்து பேசினார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X