என் ரிலேஷன்ஷிப் ஜோவிகாவிற்கு தெரியும்.. ஆசை தீர தாலி கட்டிய ராபர்ட்.. வனிதா மனம் திறந்த பேட்டி!

சென்னை: பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், சில ஆண்டுகள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல், 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' என்ற படத்தை இயக்கி இயக்குநராக மாறி இருக்கிறார். இப்படத்தை அவரின் மகளான ஜோவிகா தயாரித்து இருக்கிறார். ஜூலை 11ஆம் தேதி தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கும் நிலைகள் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு Filmibeat Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், படம் குறித்து பல சுவாரசியமான விஷயத்தை வனிதா பேசியிருக்கிறார். படத்தை இயக்குவதற்கு ஐடியாவே என்னிடம் இல்லை, கதையை மட்டும் தான் நான் எழுதி வைத்திருந்தேன். அந்த நேரத்தில் தான் கதைக்குள் ராபர்ட் வந்தார். படப்பிடிப்பும் தொடங்கிய இரண்டு நாள் சென்று விட்டது, அப்போது தான் ராபர்ட், வேறு ஒரு இயக்குனரை ஏன் தேட வேண்டும் நீயே படத்தை இயக்கலாமே என்றார். அதைத் தொடர்ந்து, ஆர்த்தி கணேஷூம் அக்கா உங்களால் முடியும் என்று சொன்னார். பல நடிகர்களும் எனக்கு ஆதரவு தெரிவித்ததால் நான் இந்த படத்தை இயக்கினேன். வேறு வழியே இல்லாமல் தான் இந்த படத்தில் கடைசி நேரத்தில் இயக்குனராக மாறினேன். என் வாழ்க்கையில் பல விஷயங்கள் கடைசி நேரத்தில் தான் நடந்திருக்கு அதேபோல இந்த படத்தை நான் இயக்கியதும்.

Possessive இருக்கு: அதுவும் பிரேக் அப் செய்து பிரிந்த பின் ராபர்ட்டுடன், அதுவும் கணவன் மனைவியாக ஒரு படத்தில் நடிப்பது என்பது சாதாரண விஷயமே இல்லை. மறந்து விட்டோம், பிரிந்து விட்டோம். அவருக்கு வேறு ஒரு வாழ்க்கை இருக்கிறது. எனக்கு வேறு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று தெரிந்தாலும், மனதிற்குள் சின்ன சின்ன விஷயங்களுக்கு Possessive மற்றும் கோபமும் வரத்தான் செய்யும். பிரேக் அப் செய்து பிரிந்த பின், நயன்தாரா, சிம்பு இருவரும் சேர்ந்து நடித்தார்கள். அதன் பின் ராபர்ட்டும் நானும் சேர்ந்து நடித்து இருக்கிறோம். இதனால், பல நேரத்தில் படப்பிடிப்பில் எனக்கும் ராபர்ட்டுக்கும் சண்டை வரும். ஆனால், அடுத்த நாள் காலை நாங்கள் சரியாகி விடுவோம். எங்களுடன் வேலை பார்த்த நடிகர்கள் தான் மண்டையை உடைத்துக்கொள்வார்கள்.

Mrs amp amp Mr Vanitha Vijayakumar amp amp
Photo Credit:

ஆசை தீர தாலி கட்டினார்: நானும் ராபர்ட் மாஸ்டரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தோம். ஆனால், அந்த நேரம் அது அமையாமல் போய்விட்டது. ஏனென்றால், அவருக்கு அந்த நேரம் விவகாரத்து ஆகவில்லை. இதனால் திருமணம் நடக்காமல் போய்விட்டது. ஆனால், எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்தே தீரும். இந்தப் படத்திற்காக நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியாக நடித்த போது, பல நேரத்தில் எமோஷனலாக பல விஷயங்கள் நினைத்து கண்கலங்கினோம். படத்தில் தாலி கட்டுவது போல, வரும் அந்த காட்சியில், ராபர்ட் உண்மையிலேயே மிகவும் எமோஷனல் ஆகிவிட்டார். இதனால், ஒவ்வொரு முறையும் அவருடைய கை நடுங்கியது, ஒரு முறை மாற்றிகிட்டிவிட்டார். இப்படி பதற்றத்திலேயே 40 முறைக்கு பிறகு தான் டேக்கே ஓகே ஆனது என நடிகை வனிதா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X