ஜோதிகா இடுப்ப காட்டுனா தப்பில்ல.. என் பொண்ணு பண்ணா தப்பா? உங்க வேலையை பாருங்க.. கடுப்பான வனிதா!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடித்து இருக்கும் திரைப்படம் மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை வனிதா, தேவயானி மகள் பற்றியிம் ஜோதிகா பற்றி பேசியது தற்போது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது.
மூத்த நடிகர் வனிதா விஜயகுமாரின் மகளான வனிதா, தற்போது அடுத்தடுத்த படத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருகிறார். நடிகையாக இருந்த வனிதா, தற்போது இயக்குநராக மாறி மிஸஸ் & மிஸ்டர் படத்தை எடுத்துள்ளார். இதில், ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ், கிரண் என பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கும் இப்படம் அடுத்த மாதம் 4ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
ஜோவிகா: மிஸஸ் & மிஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த மாதம் நடைபெற்றது. அதில், பேசிய ஜோவிகா, பிக் பாஸின் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தான் இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கிறேன். இவ்வளவு சிறிய வயதில் என்னை தயாரிப்பாளராக்கிய விஜய் டிவிக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்றார். மேலும், இந்த திரைப்படத்தில் நடித்த அனைவரும் எனக்காக மிக மிகவும் சிரமப்பட்டார்கள். இது வேண்டும், அது வேண்டும் என்று யாரும் என்னை என்னிடம் கேட்கவே இல்லை, எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்து நடிக்க முடியுமோ அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்று பேசுகின்றார்.

தேவயானி மகள்: அந்த இசைவெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ஜோவிகா கருப்பு உடை கருப்பு நிறத்தில் பாவாடை தாவணி அணிந்திருந்தார். அது கவர்ச்சியாக இருந்தது என்று பலரும் இணையத்தில் கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். அதே நேரம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரி கம பா சீசன் 5 நிகழ்ச்சியில் தேவயானி மகள் இனியா கலந்து கொண்டு பாடி வருகிறார். அவர் அந்த நிகழ்ச்சிக்கு பாவாடை தாவணியில் வருகிறார். இதுதான் வனிதாவின் வளர்ப்பு, இது தான் தேவயானியின் வளர்ப்பு என இருவரின் போட்டோக்கள் இணையத்தில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
என் மகள் அழகு: இதுகுறித்து, படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை வனிதா, தேவயானியின் மகளின் போட்டோவையும், என்னுடைய மகளின் போட்டோவை போட்டு கம்பேர் செய்கின்றனர். யாரை யாருடன் கம்பேர் செய்து பேசுவது. ஜோவிகா என் மகளாக இருந்தாலும், என்னுடன் ஒப்பிட்டு பேசிக்கொள்ள முடியாது. அவள் வேறு, நான் வேறு. அந்த காலத்தில் குஷிப்படத்தில் ஜோதிகா இடுப்பை காட்டி நடித்திருந்தார். அந்த படத்தை அனைவரும் கைத்தட்டி கொண்டாடினார்கள். அதே போல, சோஷியல் மீடியாவில் யாரோவது கவர்ச்சியா டான்ஸ் ஆடினால் கைத்தட்டி ரசிக்கிறார்கள். உண்மையில் நீங்க எல்லாம், என்ன மைண்ட் செட்டில் இருக்கிறீர்கள். ஜோதிகா இடுப்பை காட்டுனா தப்பில்லை, ஜோவிகா காட்டுனா தப்பா. ஜோவிகாவின் இடுப்பில் கேமராவை வைத்து வளைத்து வளைத்து போட்டோ எடுக்கிறார்கள். எத்தனை போட்டோ வேண்டுமானாலும் எடுக்கட்டும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, என் மகள் அழகாக இருக்கிறாள் என நடிகை வனிதா அந்த பேட்டியில் கடுப்பாசி பேசினார்.


Click it and Unblock the Notifications











