எந்த மாதிரியான வீடியோக்கள் போட்டால் வீயூஸ் அள்ளும்? நடிகை விசித்ரா சொல்லும் நச் பதில்!
சென்னை: நடிகை விசித்ரா நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை விசித்ரா பொற்கொடி படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் ரிலீஸாகவில்லை. இதைத்தொடர்ந்து அவள் ஒரு வசந்தம் படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு அறிமுகமானார்.
தலைவாசல், அமராவதி, எங்க முதலாளி, ராஜாதி ராஜா, வீரா, அமைதி படை, வில்லாதி வில்லன், ரகசிய போலீஸ், போக்கிரி ராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை விசித்ரா, நமது பிலிமி பீட் தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது எந்த மாதிரியான வீடியோக்களை போட்டால் நிறைய வியூஸ்கள் வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சர்ச்சை வீடியோக்களை போட்டால் வியூஸ்கள் அதிகம் வரும், மக்கள் ரியாலிட்டியை அதிகம் விரும்புவார்கள் என்பதால் எதார்த்தமான வீடியோக்களை போடலாம் என்றார்.
மேலும் அவர் யாருக்கு தேங்க்ஸ் சொல்வீர்கள், யாருக்கு சாரி சொல்வீர்கள் என்ற கேள்விக்கும் சுவாரசியமான பதிலை அளித்துள்ளார் நடிகை விசித்ரா. அந்த வீடியோ உங்களுக்காக..


Click it and Unblock the Notifications











