twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்-விசித்ரா

    |

    Recommended Video

    என் வாழ்க்கையில் பண்ண பெரிய தப்பு இது தான்..நடிகை விசித்ரா | Actress Vichithra interview

    சென்னை: என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத நபர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் தான். அதேபோல் நான் மன்னிப்பு கேட்க நினைக்கும் நபர் பிரபு தேவா தான் என்று நடிகை விசித்ரா வெளிப்படையாக பேசினார்.

    நான் மறக்க முடியாத நன்றி சொல்ல விரும்பும் முதல் நபர் யார் என்றால், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் தான். அவர்தான் எனக்கு ஸ்டார் வேல்யூ உள்ள படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பை வழங்கினார். அவரால் தான் எனக்கு மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று சொல்வேன்.

    அதே போல் நான் மன்னிப்பு கேட்க நினைக்கும் ஒருவர் டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா தான். காரணம், அவர் முதலில் நடனமாடிய சூரியன் படத்தில் எனக்கு தான் முதலில் வாய்ப்பு வழங்கினார். ஆனால் அந்த நேரத்தில் அவர் பிரபலமாகாததால், ஒரு பாட்டுக்காக டான்ஸ் ஆட வேண்டுமா என்று யோசித்து அதை தவிர்த்து விட்டேன் என்றார் விசித்ரா.

    நான் திரும்பி வந்துட்டேன்

    நான் திரும்பி வந்துட்டேன்

    நீண்ட நாட்களாக மீடியா வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை விசித்ரா தற்போது மீண்டும் மீடியாவில் அடிபட ஆரம்பித்துள்ளார். அவரிடம் நமது ஃபிலிமி பீட் சார்பாக பேட்டி கண்டோம். அப்போது அவர் வெளிப்படையாக நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டார்.
    என்ன தவறு செய்தேன்

    நீண்ட நாட்களுக்கு பின்பு நான் மீடியாவில் பேட்டி கொடுத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நான் செய்த தவறு என ஒன்றுமில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது என்று மிகவும் சகஜமாக பேசினார்.

    எனக்கு வாய்த்த வேடங்கள்

    எனக்கு வாய்த்த வேடங்கள்

    நான் நடித்த படங்கள் அனைத்துமே பெரிய கமர்சியல் படங்கள்தான். அதுவும் ரஜினிகாந்த்துடனும், பெரிய நடிகர்களுடனும் நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம் தான். அதிலும் அந்தப் படங்களில் எனக்கு அமைந்த வேடங்களும் பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆனது எனக்கு மகிழ்ச்சி தான்.

    சரியாவே கணித்துள்ளேன்

    சரியாவே கணித்துள்ளேன்

    டிவி சீரியல்களிலும் நான் நல்ல நல்ல வேடங்களில் நடித்துள்ளேன். அதிலும் எனக்கு நல்ல பெயரே கிடைத்து. அதே சமயத்தில் பெரிய தவறு என எதுவும் செய்யவில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையுமே பேலன்ஸ் செய்து சரியாக கணித்து தான் நடித்துள்ளேன்.

    ரியாரிட்டிதான் பிடிக்கும்

    ரியாரிட்டிதான் பிடிக்கும்

    இப்போதைய சூழ்நிலையில் சர்ச்சைக்குரிய விஷயங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டால் தான் மக்களிடம் அதிக அளவில் சென்றடைகிறது என்று ஊடகங்கள் தான் தவறுதலாக நினைக்கின்றன. ஆனால் நிஜத்தில் அப்படி கிடையாது. மக்களுக்கு ரியாலிட்டி தான் பிடிக்கும்.

    வெறுப்பு தான் வரும்

    வெறுப்பு தான் வரும்

    ஒருவரைப் பற்றி சொல்லவேண்டுமானால், அவர்களை கூப்பிட்டு அவர்களின் உள்மனதில் இருப்பதை அப்படி அப்படியே பேசச்சொன்னால், மக்களுக்கு விரைவில் சென்றடையும். அதை விட்டு விட்டு வெறுமனே, நீங்க என்ன பண்றீங்க, அப்படி இப்படி என்று கேள்வி கேட்டால் மக்களுக்கு வெறுப்பு தான் தோன்றும்.

    வருவதை ஏற்றுக்கொள்வோம்

    வருவதை ஏற்றுக்கொள்வோம்

    இப்போதைக்கு பெரிய அளவில் திட்டம் எதுவும் என்னிடம் கிடையாது. ஏனென்றால் நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் எதுவும் தெரியாது. அதனால் என்னதான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். வருவதை அப்படியே ஏற்றுக்கொள்வோம் என்று தான் இது வரையிலும் இருந்துவருகிறேன் என்று விசித்ரா தத்துவார்த்தமாக பேசியது ஆச்சரியம்.

    என்னை யாரும் மறக்கவில்லை

    என்னை யாரும் மறக்கவில்லை

    நீண்ட நாள் கழித்து மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் மக்களிடம் எப்படி எதிர்பார்ப்பு இருக்கும் என்று தான் நினைத்திருந்தேன். பரவாயில்லை. மக்கள் இன்னும் என்னை மறக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. இதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோசம் தான்.

    மக்கள் அளித்த அங்கீகாரம்

    மக்கள் அளித்த அங்கீகாரம்

    நான் மறக்க முடியாத நன்றி சொல்ல விரும்பும் முதல் நபர் யார் என்றால், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் தான். அவர்தான் எனக்கு ஸ்டார் வேல்யூ உள்ள படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பை வழங்கினார். அவரால் தான் எனக்கு மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று சொல்வேன்.

    மன்னியுங்கள் பிரபு தேவா

    மன்னியுங்கள் பிரபு தேவா

    அதே போல் நான் மன்னிப்பு கேட்க நினைக்கும் ஒருவர் டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா தான். காரணம், அவர் முதலில் நடனமாடிய சூரியன் படத்தில் எனக்கு தான் முதலில் வாய்ப்பு வழங்கினார். ஆனால் அந்த நேரத்தில் அவர் பிரபலமாகாததால், ஒரு பாட்டுக்காக டான்ஸ் ஆட வேண்டுமா என்று யோசித்து அதை தவிர்த்து விட்டேன்.

    டான்ஸ் ஆடத் தாயார்

    அதனால் எனக்கு பதிலாக மறைந்த நடிகை விஜி அந்த பாட்டுக்கு நடனமாடினார். அந்த பாட்டும், படமும் ஹிட்டாகிவிட்டது. அப்புறம் தான் நான் நினைத்தேன். நான் தவறு செய்துவிட்டோம் என்று. அப்போதே பிரவு தேவாவிடம் நான் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று நினைத்தேன். ஆனால் காலம் கடந்துவிட்டது. இப்போது அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது அவர் அழைத்தான் நிச்சயம் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடத்தயார்.

    English summary
    The person I will never forget in my life is director K.S.Ravikumar. Similarly, she has openly stated that the person I want to apologize for is Prabhu Deva.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X