ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுக்கும் விஜயலக்ஷ்மி.. கலகல பேட்டி!
சென்னை: இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலக்ஷ்மி சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் சில படங்களில் நடித்தார்.
பின்னர் தயாரிப்பாளராகவும், சின்னத்திரை தொடர்களில் நாயகியாகவும் வலம் வந்தார் விஜயலக்ஷ்மி. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் இடம் பெற்றிருந்தார்.
சில நாட்களாக கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வரும் விஜயலக்ஷ்மி Monday Monk என கூறப்படும் உடற்பயிற்சி கூடத்தில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். அது குறித்து இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

வாழ்க்கையின் நிலை
கடந்த 2,3 வருடங்கள்-ல உங்க கிட்ட உடல் ரீதியாக பல மாற்றங்களை நாங்க பாக்குறோம். ஒவ்வொரு பெண்ணுக்கும் உடல் ரீதியான மாற்றம் ஏற்படும் நீங்க எப்போ முழுசா மாறினீங்க என்ற கேள்விக்கு, இதெல்லாம் வந்து ஸ்டேஐஸ் ஆஃப் லைஃப் குறிப்பாக குழந்தை பிறந்தவுடன் எல்லாரும் பெண்களை ஓரம் கட்டிடுவாங்க ஆனால் அதெல்லாம் தாண்டி வெளியே வர எக்ஸ்ட்ராவாக நிறைய விஷயங்கள் பண்ண வேண்டியது இருக்கு. இந்த மாறி விஷயங்களும் அதில் அடங்கும் என பதில் அளித்தார்.

டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப ஈஸி
சமீபத்துல பாப்பா கூட நீங்க பண்ற வீடியோஸ் எல்லாம் ட்ரெண்டிங் ஆகுது, ரொம்ப க்ரியேடிவ்வா இருக்கு. எப்படி டைம் மேனேஜ்மென்ட் பண்றீங்க என்ற கேள்விக்கு, டைம் மேனேஜ்மென்ட் எல்லா பெண்களும் ஈஸியாக பண்ண கூடிய விஷயம். நீங்க எந்த ஹோம் மேக்கர் எடுத்துகிட்டாலும் அவங்க காலையில் இருந்து இரவு வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்வாங்க டைம் மேனேஜ்மென்ட்-ம் பண்ணுவாங்க. அது பெண்களுக்கு புது விஷயம் இல்லை எனக்கும் புது விஷயம் இல்லை என பதிலளித்தார்.

கிடைத்த புதிய அனுபவம்
காலெண்டர் ஷூட் பத்தி என்ன நினைக்கிறீங்க என கேட்க,
தனக்கு அது மிகவும் பிடித்தது என கூறினார். ராணியாக இருப்பது எப்போதும் கற்பனை பண்ணி பார்க்கின்ற ஒரு விஷயம் ஆனால் அதை நிஜமாக செய்து பார்க்கும் போது புதிய அனுபவமாக இருந்ததாகவும் அதனுடைய அவுட்புட் பார்க்கும் போதும் ரொம்ப சந்தோஷமாக இருந்ததாகவும், நம்மை ராணி மாதிரி பார்க்க யாருக்கு தான் பிடிக்காது எனவும் பதிலளித்தார்.
ஆற்றலுடன்
இன்னும் பல கேள்விகளுக்கு மிகவும் ஆற்றலுடன் பதில் கூறினார். அது மட்டுமன்றி ஃபிட்னஸ் டிப்ஸ் பலவற்றை இந்த பேட்டியில் கூறியுள்ளார். மிஸ் பண்ணாமல் இந்த பேட்டியை பாருங்க. இந்த பேட்டி பில்மி பீட் யூ டியூப் சேனலிலும் உள்ளது.


Click it and Unblock the Notifications











