பிக் பாஸ் விளையாட்டு ரொம்பவும் கடுமையானது.. விமலா ராமன் கலகல பேட்டி!
சென்னை: K. P. ஜகன் இயக்கத்தில் வெளியான ராமன் தேடிய சீதை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விமலா ராமன்.
கடந்த வாரம் Zee5 ல் வெளியான PubGoa வெப் சீரியஸில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் விமலா ராமன். அதில் நடித்த அனுபவங்களையும் மற்றும் பல ஸ்வாரசியமான கேள்விகளுக்கும் இந்த பேட்டியில் பதில் அளித்துள்ளார்.
உங்களின் நடிப்பு திறமையை முழுக்க முழுக்க பயன்படுத்திய இயக்குனர் யார் என்ற கேள்விக்கு, பெரிதாக யோசிக்காமல் K. P. ஜகன் எனவும், ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் ரஞ்சிதா கதாபாத்திரம் இன்றளவும் மக்களிடையே ஞாபகம் உள்ள காரணம் K. P. ஜகன் அந்த கதாபாத்திரத்தை பயன்படுத்திய விதம் தான் என பதில் கூறினார்.

வர்ணித்து
வசீகரமான கண்களை கொண்ட விமலா ராமனிடம் இப்பொழுதுள்ள நடிகைகளில் யாருடைய கண்கள் அழகாக உள்ளது என்ற கேள்விக்கு, நடிகை சினேகா என பதில் கூறினார். சினேகாவின் அழகான சிரிப்பும் கண்களும் அவருக்கு மிகவும் பிடிக்கும் என வர்ணித்துள்ளார்.

போட்டிக்கு தகுதி
மலையாள முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிவுள்ளீர்கள் மலையாள படமான ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருது போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதை பற்றி என்ன நினைக்கிறீங்க என்ற கேள்விக்கு, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் இவ்வளவு தூரம் ஜல்லிக்கட்டு படம் போனது பெருமையாக உள்ளது எனவும் புகழ்ந்து கூறியுள்ளார்.

3 முறை
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து கேட்டதற்கு, ஏன் எல்லாரும் இதையே கேக்குறிங்க என ஜாலியாக தன்னுடைய பதிலை கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு 3 முறை வாய்ப்பு கிடைத்தும் அது மிகவும் கடுமையான போட்டி என்பதால் வாய்ப்பை நிராகரித்ததாக பதில் கூறியுள்ளார்.

டாய்லெட் பற்றி
விமலா ராமன் இப்பொழுது நிறைய ஓடிடி தொடர்கள் செய்ய வாய்ப்பு வருவதாகவும் இன்னொரு பக்கம் நிறைய புது கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடிப்பதாகவும் கூறி உள்ளார் . அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் பயன் படுத்தும் டாய்லெட் பற்றியும் தனது கருத்தை வெளிப்படையாக சொல்லி உள்ளார் . இது போன்று இன்னும் பல கேள்விகளுக்கு வெர்சடைல் விமலா ராமன் ஸ்வாரஸ்யமாகவும், ருசிகரமாகவும் பதில் கூறியுள்ளார். இந்த வீடியோ பேட்டியை மிஸ் பண்ணாமல் கண்டு மகிழுங்கள். நிறைய கூடுதல் தகவல் பில்மி பீட் யு ட்யூப் சேனலில்லும் காணலாம்.


Click it and Unblock the Notifications











