ஜோதிகா செய்ததை நான் செய்யல.. இயக்குநர் என்னை மிரட்டினார்.. விந்தியா சொன்ன அந்த விஷயம்!
சென்னை: நடிகர் ரகுமான் கதாநாயகனாக நடித்த சங்கமம் படத்தின் மூலம் தன்னுடைய 17 வயதில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை விந்தியா. இவர் நடிகையாக மட்டுமில்லாமல், அதிமுக கட்சியில் இணைந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக பல தேர்தல்களில் பிரச்சாரம் செய்து வரும் இவர், ரிதம் பட இயக்குனர் மிரட்டியதால் சங்கமம் படத்தை தேர்வு செய்தேன் என்றார்.
1999ம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் சங்கமம். இப்படத்தில் ரகுமான், விந்தியா,மணிவண்ணன், விஜயகுமார், ஸ்ரீவித்தியா, வடிவேலு, ராதா ரவி என பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். அவரின் இசையில் அந்த படத்தில் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் இன்றளவிற்கும் அனைவருக்கும் பிடித்த பாடலாகவே உள்ளது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை விந்தியாவிற்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

விந்தியா பேட்டி: இவர் நடிகை என்பதையும் தாண்டி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக பல தேர்தல்களில் பிரச்சாரம் செய்துள்ளார். தற்போது அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ள நடிகை விந்தியா. தன்னுடைய திரையுலக பயணம் குறித்து பேட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சங்கமம் படத்திற்கு முன்னால் நான் கமிட்டானது ரிதம் படத்தில் தான். அதற்காக போட்டோஷூட் கூட நடந்தது. அந்த புகைப்படங்களை சங்கமம் பட இயக்குனர் சுரேஷ் சந்திரா பார்த்துவிட்டு, நான் உன்னை ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறேன் என்று 'ரிதம்' பட இயக்குநர் வசந்திடம் கூறினார்.
ஜோதிகாவிற்கு வாய்ப்பு: அதன் பின் வசந்த் சார் நான் உன்னை அறிமுகப்படுத்துவேன். ஆனால், சங்கமம் படத்தில் நடித்தால், ரிதம் படத்தில் உனக்கு வாய்ப்பு கிடைக்காது. உனக்கு சம்மதமா?' என்று மிரட்டினார். இப்படி அவர் கூறி விட்டதால், நான் ரிதம் படத்தில் சிறிய ரோலில் நடிப்பதை விட, ஹீரோயினாக நடிப்பதே சரி என்று தோன்றியது. அதனால், ரிதம் படத்தின் வாய்ப்பை விட்டுவிட்டு, சங்கமம் படத்தில் நடிக்க தேர்வு செய்தேன். இதன் பின் தான் ஜோதிகாவுக்கு ரிதம் படத்தின் வாய்ப்பு கிடைத்தது. நான் சங்கமம் படத்திற்காக முதன் முதலில் வாங்கிய சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். அதை என் அம்மாவிடம் தான் கொடுத்தேன். அதன் பிறகு அடுத்தடுத்த படத்தில் நடித்தேன்.
17 வயதில் நடித்தேன்: ஆனால், அதன் பின் வாழ்க்கையில் பெரிய கஷ்டத்தை சந்தித்தேன். நான் என் 17 வயதிலேயே சங்கமம் படத்தில் கதாநாயகியாக நடித்தேன். முதல் படத்திலேயே பெயர், புகழ் என பெரிய அளவில் சாதித்தேன். ஆனால், 2008ம் ஆண்டு என் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவு வந்தது. வாழ்க்கையிலேயே ரொம்ப மோசமான கருப்பு நாட்கள் என்று அந்த நாட்களை சொல்லாம். ரொம்ப குண்டாகிவிட்டேன், இதனால் இனிமே நமக்கு வாழ்க்கை இல்லை, 17 வயதிலேயே சினிமாவிற்கு வந்ததால் படிப்பும் இல்லை. அப்போது தான் ஜெயலலிதா அம்மா என்னை அழைத்துபேசி என்னால எல்லாம் செய்ய முடியும் என்று தன்னம்பிக்கை கொடுத்தார் என்றார்.


Click it and Unblock the Notifications











