நடிகர்கள் பணக்காரர்கள் அல்ல… அவர்களுக்கும் தேவைகள் இருக்கும்… வினோதினியின் சுவாரசியமான பேட்டி !

சென்னை : நாடகம், நடிப்பு, நகைச்சுவை என அனைத்திலும் தனக்கென தனி பாதையை வகுத்துக்கொண்டு மின்னி வருகிறார் நடிகை வினோதினி.

நடிப்பு மட்டுமல்லாமல் திரைக்கதை எழுதுவதிலும் திறமை மிக்கவராக இருக்கிறார்.

அவரை பற்றி அறியாத பல சுவாரசியமான தகவல்களை இந்த நேர்காணலில் பார்க்கலாம்.

Actress Vinodhini Vaidyanathan shares her experiences

கேள்வி : ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாவது குறித்து நீங்கள் நினைப்பது என்ன?

பதில் : இதைத்தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமல் சொன்னார். அவர் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் கூறினார். அதை நாம் யாரும் கருத்தில் கொள்ளவில்லை, அவர் மீது பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. ஆனால், இன்று ஓடிடியில்தான் பல படங்கள் வெளியாகின்றன. நான் சினிமாத்துறையில் இருக்கும் நபராக இருப்பதால், இது ஒரு ஆரோக்கியமான விஷயம் அல்ல, திரையரங்குகள் வளர வேண்டும் நாங்களும் வாழவேண்டும் என்றால் திரையரங்கில் தான் படங்கள் வெளியாக வேண்டும்.

கேள்வி : திரைப்படத்தை இயக்கும், தயாரிக்கும் திட்டம் உள்ளதா?

பதில் : படத்தை தயாரிக்கும் அளவுக்கு என்னிடம் பணமில்லை, மேலும், பணமிருந்தாலும் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் எனக்கு ஆர்வம் இல்லை.

Actress Vinodhini Vaidyanathan shares her experiences

கேள்வி : திரைத்துறையில் நுழையும் இளம்நடிகர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அட்வைஸ்?

பதில் : இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் சாதிக்க முடியும், அதற்கான தளங்களும் அதிகரித்துள்ளன. இதனால், சோர்ந்து போகாமல் அனைவரும் முயற்சி செய்யுங்கள் , கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள் இதுதான் என் பார்வை என்றார் வினோதினி.

கேள்வி : நடிகர் சங்கம் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு கலைஞர்களுக்கும் எந்த மாதிரியான உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

பதில் : பெரிய உதவிகள் செய்வதை விட, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை பாக்கி வைக்காமல் கொடுத்தாலே போதும். இந்த நேரத்தில் இது பேருதவியாக இருக்கும். நடிகர்கள் என்றாலே பணக்காரர்கள், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற பார்வை உள்ளது. உண்மையில் அப்படி இல்லை, அவர்களுக்கும் தேவைகள் இருக்கும் அந்த தேவையை உணர்ந்து உழைச்ச பணத்தை அவர்களுக்கு கொடுங்கள்.

கேள்வி : நீங்கள் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறீர்களா?

பதில் : நிச்சயமாக கதையை தேர்வு செய்துதான் நடிப்பேன், குறைந்ததது என்னுடைய கதாபாத்திரம் குறித்தாவது கேட்டுக்கொள்வேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X