விபத்திற்கு பின் வாழ்க்கையே மாறிடுச்சு.. நல்லா தூங்கி பல நாள் ஆச்சு..யாஷிகா அனந்த் வேதனை!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்ட யாஷிகா, நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்து ஒன்றில் சிக்கி மரணத்திடம் போராடி மீண்டு வந்துள்ளார். இதுகுறித்து நடிகை யாஷிகா மனம் திறந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தள்ளார்.

கவர்ச்சி கன்னியாக வலம் வரும், யாஷிகா ஆனந்த், ரகுமான் நடித்த துருவங்கள் 16, விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, யோகி பாபுவுடன் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த யாஷிகா ஆனந்த், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார். இதையடுத்து, ஏராளமான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாசல் கதவை தட்டியதை அடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

Actress Yashika aannand Emotional interview about her accident

நடிகை யாஷிகா ஆனந்த்: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது மோசமான விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில், யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மிகவும் மோசமான நிலையில் இருந்த யாஷிகா, கால் எலும்பு முறிந்து படுத்தப்படுக்கையாக தீவிர சிகிச்சை பிரிவில் 3 மாதங்களுக்கு எழுந்து நிற்கக்கூட முடியாமல் இருந்த யாஷிகா, கடவுளின் அருளால், அதில் இருந்து மீண்டு வந்தார்.

Actress Yashika aannand Emotional interview about her accident

கைவசம் உள்ள படம்: விபத்திற்கு பிறகு மீண்டும், சமூக வலைதளங்களில், ஆக்டிவான யாஷிகா ஆனந்த், படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அண்மையில் இவர் ரிச்சர்ட் ரிஷியுடன் சேர்ந்து சில நொடிகளில் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படம் வரவேற்பை பெறவில்லை.யாஷிகாவிடம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படம் என கணிசமான படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

மோசமான கமெண்டுகள்: இந்நிலையில்,யாஷிகா ஆனந்த் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், 17 வயதில் முரட்டு குத்து படம் நடித்ததாலும், கிளாமர் ரோலில் நடிக்கும் போது நிஜ வாழ்க்கையில் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். இதனால், மோசமான கமெண்டுகளை பதிவிடுகிறார்கள், நெகட்டிவ்-ஆக பேசுகிறார்கள். இது எனக்கு வருத்தமாக இருந்தாலும், என்னை வெறுப்பவர்களை தூரத்தில் இருந்து என்னை பார்த்து எஞ்சாய் பண்ணுங்க என்று தான் சொல்வென்.

Actress Yashika aannand Emotional interview about her accident

வாழ்க்கையே மாறிடுச்சு: தொடர்ந்து பேசிய அவர், நான் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது மோசமான ஒரு விபத்தில் சிக்கினேன். அந்த விபத்தில் என் உயிர் தோழியை பறி கொடுத்தேன். கார் விபத்திற்கு பின் நான் இரவு தூங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தூக்கமே வராது, கண்ணை மூடினால் அந்த விபத்துத்தான் நினைவிற்கு வரும். மேலும், புல்லட் ஓட்டுவதையும் நிறுத்திவிட்டேன். புல்லட் ஓட்டினால் எனக்கு உள்ளுக்குள் ஒரு பயம் வருகிறது இப்படி அந்த விபத்து என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. தனக்கு பிடித்த உணவு குறித்து பேசிய யாஷிகா, நான் வெஜ் உணவு சாப்பிடுவதையே விரும்புகிறேன், ஒரு வேலை நான் நான் வெஜ் சாப்பிட்டால், அலர்ஜியாகி, உதடு வீங்கிவிடும், கண்ணுக்கு கீழ் பெரிதாகிவிடும், ஐ படத்தில் வர விக்ரம் போல் மாறிவிடுவேன் என்று யாஷிகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X