விளம்பரம் படம் டு கண்ணாமூச்சி வெப் சீரிஸ்.. இயக்குநர் அவினாஷ் சிறப்பு பேட்டி!
சென்னை: விளம்பர படங்களை இயக்கி வந்த அவினாஷ், கண்ணாமூச்சி எனும் வெப் சீரிஸை இயக்கி உள்ளார்.
Recommended Video
கடந்த 13ம் தேதி ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தில் 5 எபிசோடுகள் கொண்ட இந்த வெப்சீரிஸ் வெளியாகி உள்ளது.
வெப் சீரிஸ் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பெரிய பெரிய இயக்குநர்களும், நடிகர்களும், தற்போது திரைப்படங்களுக்கு நிகராக வெப் தொடர்களிலும் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

நெட்பிளிக்ஸில் தொடங்கி, அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார், ஜி5 என பல வெப் ஸ்ட்ரீமிங் தளங்களின் எண்ணிக்கைகளும் பெருகி வருகின்றன.

இயக்குநர் மிஷ்கின் தம்பி ஜி.ஆர். ஆதித்யா திரைக்கதையில், விளம்பர பட இயக்குநர் அவினாஷ் இயக்கத்தில், பூர்ணா நடிப்பில் வெளியாகி உள்ள கண்ணாமூச்சி வெப் சீரிஸ் ரசிகர்களை மிரட்டி வருகிறது.

ஹாரர் த்ரில்லராக இந்த வெப் சீரிஸ் உருவாகி உள்ளது. மகளை தொலைத்து விட்டு தேடும் தாயாக பூர்ணா நடித்திருப்பது குறித்தும், கண்ணாமூச்சி வெப் தொடரின் கண்ணாமூச்சி ஆட்டம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் அவினாஷ் நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள பிரத்யேக நேர்காணலை வீடியோவை க்ளிக் செய்து கண்டு மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications











