15 வயசுதான் ஆகுதா? வரம்பு மீறும் தாத்தாக்கள்.. கவர்ச்சி காட்டினாத்தான் காசு.. ஆடல் பாடல் ஷாரா பேட்டி

சென்னை: ஆடல் பாடல் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் ஷாரா. இந்த நிகழ்ச்சியில் நைட்டியுடன் இவர் போட்ட ஆட்டம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தற்போது இன்ஸ்டாகிராமிலும் பிரபலமாகி வருகிறார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், மேடையில் சந்திக்கும் சங்கடங்களையும் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஷாரா அளித்துள்ள பேட்டியில், "நான் பிறந்தது கோயம்புத்தூரில்தான். என்னுடைய அப்பா, அம்மா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பிறகு சித்திதான் என்னை வளர்த்தார். வாழ்க்கையில் பல சங்கடங்களை அனுபவித்ததால், இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே வந்து தற்போது தனியாகவே இருக்கிறேன்.

dancer Zaara painful story

ஆடல் பாடல் ஷாரா: நான் கிளாசிக்கல் டான்சர் என்பதால், ஆடியோ லாஞ்ச் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் குரூப் டான்சராக நடனம் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. பலரும் கவர்ச்சியான உடை அணிந்து ஆடுவார்கள். நான் ஒரு மேடையிலும் கவர்ச்சியாக உடை அணிந்து ஆடமாட்டேன் என்று சொன்னேன். ஆனால், அவர்கள் கவர்ச்சியாகத்தான் ஆட வேண்டும் என கூறுவார்கள். அப்போது ஒரு நிகழ்ச்சியில் நைட்டி அணிந்து ஆடினேன். அது இவ்வளவு டிரெண்டாகும் என்று நான் நினைக்கவே இல்லை. தற்போது எந்த இடத்திற்கு சென்றாலும், 'நைட்டியுடன் டான்ஸ் ஆடுங்கள்' என கேட்கும் அளவிற்கு அந்த வீடியோ வைரலாகிவிட்டது.

15 வயசு தானா?: பொதுவாக ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் அனைவரும் ஒரே ஸ்டெப்பில் ஆடுவார்கள். ஆனால் நான் அங்கு இருந்தவர்களை மகிழ்விக்கும் வகையில் பலவிதமான ஸ்டெப்களை போட்டு ஆடுவேன். அதேபோல் என்னைப் பார்க்கும் பலரும் எனக்கு 15 வயது தான் என்று சொல்வார்கள். ஆனால் நான் அவ்வளவு சின்ன பெண் கிடையாது. எனக்கு இப்போது 20 வயதாகிறது.

தாத்தாக்களின் சேட்டை: பெரும்பாலும் கோவில் திருவிழாக்கள் மற்றும் ஊர் திருவிழாக்களில்தான் ஆட அழைப்பார்கள். அந்த இடங்களில் உடை மாற்றுவதற்குக் கூட சரியான இடம் இருக்காது. நான்கு ஜமக்காலங்களை பிடித்துக்கொண்டுதான் உடை மாற்றுவோம். இளைஞர்கள் கூட அமைதியாக இருப்பார்கள். ஆனால் வயதான தாத்தாக்கள்தான் தவறான பார்வையுடன் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். 'இங்கிருந்து போங்க' என்று எவ்வளவு சொன்னாலும் போகாமல், உடை மாற்றுவதை பார்த்துக்கொண்டே இருப்பார்கள்" என ஷாரா அந்த பேட்டியில் சில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X