DNA Review: அதர்வாவின் டிஎன்ஏ படம் எப்படி இருக்கு? பயில்வானின் விமர்சனம்!

சென்னை: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ள திரைப்படம் DNA. இதில் அதர்வா, நிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சேத்தன், ரமேஷ் திலக் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியான நிலையில் இப்படம் பற்றி பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

DNA திரைப்படத்தில் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்திருக்கிறார் அதர்வா. பிரேக் அப்பால், சதா குடித்துக்கொண்டே இருக்கும் அதர்வாவிற்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டுமென சேத்தன் நினைக்கிறார். மறுபக்கம், நிமிஷா சஜயனுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால், அவளின் வெகுளித்தனமாக பேச்சால், அவளுக்கு பைத்தியம் என முடிவு செய்பவர்கள் அவளை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். பல வரன்கள் தேடியும் நிமிஷா சஜயனுக்கு திருமணம் ஆகாமல் இருக்கிறது. இந்த செய்தி சேத்தனின் காதுக்கு வர, சதா குடிபோதையில் இருக்கும் அதர்வாவை நிமிஷாவிற்கு திருமணம் செய்து வைத்தால் பிரச்சனை இல்லை என முடிவு செய்து, இருவருக்கும திருமணம் செய்து வைக்கிறார்..

டி என் ஏ விமர்சனம்: திருமணத்திற்கு பின் நிமிஷா குழந்தை பிறக்கிறது. குழந்தையை பார்த்த நிமிஷா சஜயன், இது என்னுடைய குழந்தை இல்லை, மருத்துவமனையில் குழந்தையை மாற்றிவிட்டார்கள் என்று சொல்கிறாள். ஆனால், அவளின் பேச்சை யாரும் ஏற்காமல் பைத்தியம் என்று சொல்கின்றனர். ஆனால், அதர்வா தன்னுடைய மனைவிக்கு துணையாக இருந்து குழந்தையை தேடுகிறார். கடைசியில் குழந்தை கிடைத்ததா... இல்லையா .. என்பது தான் இந்த திரைப்படத்தில் கதை.

DNA Bayilvan Ranganathan Review
Photo Credit:

படம் சூப்பர்: வெட்டு, குத்து, அடிதடி, என திரையில் வன்முறையான பல திரைப்படங்களை பார்த்து பழகிப்போன நமக்கு இந்த திரைப்படம் ஒரு புதுமையான கதை அம்சத்தை கொண்ட படமாக இருக்கிறது. இந்த படத்தில் கொடூர கொடி குடிகாரனாக அதர்வா தன்னுடைய நடிப்பை திறம்பட செய்து இருக்கிறார். அதேபோல, இல்லத்தரசிகளின் மனதை வென்று, ஒரு அம்மாவாக அருமையாக நடித்து இருக்கிறார் நிமிஷா சஜயன். பாலாஜி சக்திவேல் இந்த திரைப்படத்தில், ஒரு நல்ல போலீஸ்காரராக நடித்திருக்கிறார். இப்படி ஒரு போலீஸ்காரன் காரர் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு இருந்தால், பிரச்சனையே வராது என்று சொல்லும் அளவிற்கு அவருடைய நடிப்பு நன்றாக உள்ளது. அதே போல, திலக், அதர்வாவின் நண்பனாக நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நண்பன் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருந்தால் பிரச்சனையே வராது என்று சொல்லும் அளவிற்கு நல்ல நடிப்பு.

வெற்றி பெறும்: DNA திரைப்படத்தில் நல்ல ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்கள், அதாவது மருத்துவமனையில் கவனமாக இருக்க வேண்டும் என்பது தான். அதே போல, கிளைமாக்ஸ் காட்சியில் இல்லத்தரசிகளின் மனதை வென்றுவிட்டார் இயக்குநர். இந்த திரைப்படம் கரகாட்டக்காரன் திரைப்படம் போல, ராமநாராயணனின் பல வெற்றித்திரைப்படத்தை போல, இந்த திரைப்படமும் பெண்களின் வரவேற்பை பெற்று நிச்சயம் வசூலை அள்ளிக்குவிக்கும். ஒரு ஆணுக்கு படம் பிடித்த இருந்தால், அவன் மட்டும் தான் பார்ப்பார். ஆனால், பெண்களை மனம் படம் வென்றுவிட்டால், நிச்சயம் அவர்கள் குடும்பத்தோடு சென்று பார்ப்பார்கள். அந்த வகையில் இந்த படம் நிச்சயம் வசூலை அள்ளும். இந்த திரைப்படத்திற்கு நான் கொடுக்கும் மதிப்பெண் 100க்கும் 58 என்றார் பயில்வான் ரங்கநாதன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X