»   »  காலைப் பனியில் அதிசயா!

காலைப் பனியில் அதிசயா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வட்டாரம் செகண்ட் ஹீரோயின் அதிசயா கையில் இப்போது 3 படம் இருக்கிறதாம்.

தஞ்சாவூர் தந்த அழகு பொம்மைதான் இந்த அதிசயா. சுத்தத் தமிழச்சியான அதிசயா, அட்டகாசத் திறமைகள்நிறைய கொண்டவர். வட்டாரத்தில் 2வது நாயகியாக வந்து போனாலும், அவரைத் தேடி இப்போது 3 ஹீரோயின்வாய்ப்புகள் ஓடி வந்திருக்கிறதாம்.

இதில் ஒரு படத்தை ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளார். படத்துக்கு காலைப் பனி என்று அருமையான பெயரைவைத்துள்ளனர், இதில் புதுமுகமான ஜே.ஜே. ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இதில் எனக்கு அருமையான கேரக்டர், காலைப் பனி பார்க்க எப்படி இருக்கும்? அது போலவே இப்படத்திலும்எனது கேரக்டர் படு ரம்யமாக இருக்கும் என்கிறார் அதிசயா.

இதுதவிர மேலும் 2 படங்களையும் பேசிக் கொண்டிருக்கிறார் அதி கூடிய விரைவில் இந்தப் படங்கள் குறித்தஅறிவிப்பும் வெளியாகுமாம்.

இந்த ஆண்டு எனது ஆண்டு, கலக்கப் போகிறேன் பாருங்க என்று ரவுண்டு கட்டி ரவுசு பண்ண காத்திருக்கும்அதிசயா படு ஆர்வமாக கூறுகிறார்.

அருமையான நடிப்பு பிளஸ் அளவான கிளாமர் என சூப்பர் ஃபார்முலாவுடன் களம் இறங்கியுள்ள அதிசயா,நானாக வாய்ப்புகளைத் தேடிப் போக மாட்டேன். என்னால் முடியும் என்று நம்பி என்னைத் தேடிவருகிறவர்களை கைவிடவும் மாட்டேன் என்று கமல் பாணியிலும் தத்துவமாக பேசி அசத்துகிறார்.

பொதுவாக 2வது நாயகியாக நடித்தால் தொடர்ந்து அதே போன்ற ரோல்களைத்தான் கொடுப்பார்கள்கோலிவுட்டார். ஆனால் அதிசயா விஷயத்தில் அது மாறியிருக்கிறது.

அவரால் தனித் தவில் வாசிக்க முடியும் என்று புரிந்துதான் நிறையப் பேர் அதிசயாவை தனி ஆவர்த்தனத்திற்குஅழைக்க ஆரம்பித்துள்ளனராம். சொல்லிச் சொல்லி சந்தோஷப்படுகிறார் அதிசயா.

பின்னுங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil