டி.என்.ஏ டெஸ்டில் தெரியவந்த உண்மை.. மாதம்பட்டி ரங்கராஜூக்கு 7 வருட சிறையா? வழக்கறிஞர் சொல்வது என்ன!

சென்னை: சமையல் கலைநிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றியதாக கடந்த ஆண்டு மகளிர் ஆணையத்தில் புகாரளித்திருந்தார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவின் குற்றசாட்டை மறுத்த நிலையில், தற்போது ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி தான் தந்தை என்பது உறுதியாகி இருப்பதால், மாதம்பட்டி தற்போது பெரிய சிக்கலில் சிக்கி உள்ளார்.

Madhampatty Rangaraj Joy Chrizildaa
Photo Credit:

மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றவிட்டதாக ஜாய் கிரிஸில்டா புகார் கூறியிருந்த நிலையில், அக்டோபர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஜாய் ராஹா ரங்கராஜ் என பெயரிட்டார். இந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூடையது என்பதை நிரூபிக்க மாதம்பட்டி ரங்கராஜூக்கு மரபனு பரிசோதனி செய்ய வேண்டும் என ஜாய் கிரிஸில்டா கோரிக்கை வைத்தார். மரபனு பரிசோதனைக்கு மாதம்பட்டி சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜூக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது.

ஜாய் கிரிஸில்டா: இதையடுத்து நேற்று இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அதில், மாதம்பட்டி ரங்கராஜூக்கு நடத்தப்பட்ட மரபனு பரிசோதனையில் ஜாய் கிறிசில்டாவின் குழந்தைக்கு அப்பா ரங்கராஜ்தான் என்பது உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு நீதிபதி செந்தில்குமார் ஒத்திவைத்துள்ளார்.

பராமரிப்பு செலவு: இதுகுறித்து பேட்டி அளித்துள்ள வழக்கறிஞர் பிரியாதர்ஷினி, 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்றும், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என ஜாய் மகளிர் ஆணையத்திலும், நீதிமன்றத்தில் புகார் அளித்து இருந்தார். அதே நேரம் குழந்தையை வளர்க்க பராமரிப்பு செலவுக்கான பணத்தை தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்த மாதம்பட்டி, அது என் குழந்தை என்பதை நிரூபிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட டி.என்.ஏ டெஸ்ட்டில் தான் அது மாதம்பட்டியின் குழந்தை என்பது உறுதியாகி உள்ளது.

7 வருட சிறையா: இதில், ஜாய் கேட்ட பராமரிப்பு தொகையை நிச்சயம் மாதம்பட்டி கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஏன், என்றால் ஏற்கனவே மனைவி இருக்கும் போது அவரிடம் விவாகரத்து வாங்காமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது கிரிமினல் ஆக்ஷன் தான்.மேலும், அது மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தை என்கிற முறையில் குழந்தைக்கும் சில உரிமை உள்ளது. அதாவது, தந்தை உடன் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, தந்தை எப்படி வாழ்க்கிறாரோ அதே போல குழந்தைக்கு வாழும் உரிமை அந்த குழந்தைக்கு இருக்கிறது.

இதனால், ஜாய் கேட்ட பராமரிப்பு தொகை அவர் தரவேண்டும். அப்படி இல்லை என்றால், நீதிமன்றம்தில் நேரடியாக தலையிட்டு அவரின் சொத்து, சம்பளத்தை ஜாய்க்கு பிரிந்து கொடுக்கும். அதற்கும் மாதம்பட்டி ஒத்துவரவில்லை என்றால், ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட்டை பிறப்பிக்கப்படும் இதனால் அவர் ஒரு மாதம் சிறையில் இருக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் நம்ப வெச்சி ஏமாத்தி திருமணம் செய்தது, அடித்து துன்புறுத்தியது போன்றவற்றுக்கு 7 வருட சிறைதண்டனை கிடைக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X