எனக்கு அழகை தந்த பெற்றோருக்கு நன்றி: ஐஸ்வர்யா ராய் பச்சன்

By Siva

மும்பை: தனக்கு அழகை அளித்த பெற்றோருக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது 40வது பிறந்தநாளை கடந்த 1ம் தேதி கொண்டாடினார். குழந்தை பெற்ற பிறகு ஐஸ்வர்யா படங்களில் நடிக்காமல் உள்ளார். அவர் விரைவில் கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது பிறந்தநாள் அன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பெற்றோருக்கு நன்றி

பெற்றோருக்கு நன்றி

எனக்கு அழகை அளித்த எனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஐஸ்வர்யா தெரிவித்தார்.

திருமணமானால்

திருமணமானால்

திருமணம் ஆகி, பெற்றோரை விட்டு பிரிந்து வந்துவிட்டால் நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். எனக்கு அருமையான வாழ்க்கை தந்த என் பெற்றோருக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவர்களுடன் செலிவட்ட நேரங்கள் தான் எனக்கு உலகம் என்று தெரிவித்தார் ஐஸ்வர்யா.

நடிகையாவேன் என்று

நடிகையாவேன் என்று

நான் நடிகை ஆவேன் என்று நினைக்கவே இல்லை. என் குடும்பத்திற்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை. என் குடும்பம் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் குடும்பம். நான் அறிவியல் மாணவி என்றார் ஐஸ்.

கடவுளுக்கு நன்றி

கடவுளுக்கு நன்றி

சினிமாத் துறையில் சின்சியராக வேலை பார்க்கும் ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டுள்ளேன். இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது கணவர் வீட்டில் உள்ளவர்கள் கலையை மதிப்பவர்கள் என்று ஐஸ்வர்யா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X