இந்த வயதில் ஃபிகரை மெயின்டெய்ன் செய்வது எப்படி?: ரகசியத்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்
மும்பை: இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரகசியத்தை தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யா ராய்க்கு 44 வயதாகிறது. இன்னும் 2 மாதங்களில் 45 ஆகிவிடும். இந்த வயதிலும் ஐஸ்வர்யா ராய் தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்துள்ளார்.
ஆராத்யாவை பெற்ற பிறகு குண்டாகிவிட்ட ஐஸ் பின்னர் மீண்டும் பழையபடி ஒல்லியாகிவிட்டார்.

அழகு
ஐஸ்வர்யா ராய் இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரகசியத்தை தெரிவித்துள்ளார். நான் ஒர்க்அவுட் எல்லாம் செய்வது இல்லை. இயற்கையாகவே என் உடல் இப்படி உள்ளது. எனக்கு மெட்டபாலிசம் நல்லபடியாக உள்ளதால் எடை அதிகரிப்பது இல்லை. நான் சுறுசுறுப்பானவள். சோம்பேறி கிடையாது. கொஞ்சம் யோகா செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் நடிகைகள் பலர் தங்கள் அழகின் மீது நம்பிக்கை இல்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறார்கள். நம்ம ஸ்ரீதேவி கூட பல முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். ஐஸ்வர்யா ராயும் ஏகப்பட்ட முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக பல காலமாக பேசப்படுகிறது. இது குறித்து ஐஸ்வர்யா ராய் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அழகு
நான் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்யவில்லை. என் அழகு இயற்கையானது. எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். எனக்கு என் ரசிகர்கள் ஆதரவாக உள்ளனர். என் படம் எப்பொழுது வரும் என்று காத்திருக்கிறார்கள். என் சுயசரிதையை எழுதுவது பற்றி பலர் என்னிடம் கேட்கிறார்கள். அது குறித்து நான் இதுவரை யோசிக்கவே இல்லை. என் வாழ்க்கையை பற்றி நானே எழுதுவதா என்று தெரியவில்லை என்கிறார் ஐஸ்.

கணவர்
ஐஸ்வர்யா ராய் நடிப்பில் அண்மையில் வெளியான ஃபேனி கான் படம் ஓடவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து குலாப் ஜாமூன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 8 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் சேர்ந்து நடிப்பதால் படத்தின் மீது தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











