ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள எப்படி.. ஐஸ்வர்யா ராஜேஷின் மனம் திறந்த கேள்வி !

சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்'சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்' நிகழ்ச்சியில் ரவிசங்கர் உடன் மனம் திறந்து பேசும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பல கேள்விகளை கேட்டு உள்ளார் . இந்த நிகழ்ச்சி அக்டோபர் 11-ந்தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி 'சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்' என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதில் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் ரவிசங்கருடன் கலந்துரையாடி வருகின்றனர்.

இந்த வாரம் அக்டோபர் 11-ந்தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டு தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து ரவிசங்கருடன் மனம் திறந்து பேச இருக்கிறார்.

சந்தித்த சவால்கள்

சந்தித்த சவால்கள்

மேலும் புதிர் நிறைந்த வாழ்க்கை குறித்த பல்வேறு சந்தேகங்களையும் ஐஸ்வர்யா கேட்கிறார். அதற்கான விளக்கங்களை இந்த நிகழ்ச்சியில் தெளிவாக விளக்குகிறார் ரவிசங்கர் . ஒரு வெற்றிகரமான நடிகையாக இந்த இடத்திற்கு வருவதற்கு தமது வாழ்க்கையில் தான் சந்தித்த சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அவர் ரவிசங்கருடன் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசுகிறார்.

பல போராட்டங்கள்

பல போராட்டங்கள்

இந்த நிகழ்ச்சியின் 3 முக்கிய விஷயங்கள் வருமாறு என்னவென்றால் ஒரு நடிகையாக வருவதற்கான பயணத்தில் தான் எதிர்கொண்ட பல போராட்டங்கள் மற்றும் தடைகள் குறித்து குருதேவிடம் கலந்துரையாடுகிறார். இதுபோன்று வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு எவ்வாறு அதில் இருந்து மீண்டு வருவது என்பது குறித்த ஆலோசனைகளை கேட்கிறார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலானது தொற்று நோய் தொடர்பான விவாதத்திற்கு செல்கிறது. பூமி தன்னை குணப்படுத்துவதற்கான வாய்ப்பாக தொற்று நோயை எவ்வாறு முன் வைத்துள்ளது என்பது குறித்து ரவிசங்கர் விளக்குகிறார்.

உறவுகளுக்கான

உறவுகளுக்கான

பூமியும் அதில் உள்ள மூலக்கூறுகளும் தங்களை மீட்டெடுக்க கடுமையாக முயற்சிக்கும் பல்வேறு வழிகளைப் பற்றி பேசுகையில், கோவிட் - 19 தொற்று பரவலை தவிர்ப்பதற்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ரவிசங்கர் கேட்டுக் கொள்கிறார்.வெற்றிகரமான உறவுகளுக்கான வழிகாட்டுதல்கள் பற்றி பேசுகிறார்கள் . ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரவிசங்கர் இடையிலான உரையாடலானது ஒரு சுவாரஸ்யமான பாதையை நோக்கி செல்கிறது.

தம்பதிகள்

தம்பதிகள்

வேகமான இந்தக் காலக்கட்டத்தில் தம்பதிகள் தங்கள் இடையே ஆரோக்கியமான உறவை வளர்த்துக் கொள்வது குறித்து ரவிசங்கர் வழிகாட்டுதல்களை அவர் கேட்கிறார். அதற்கு ஒரு சிறந்த திருமண வாழ்க்கையை அழகாக விவரிக்கிறார். அதில் உறவுகள் எவ்வாறு ஒரு செழிப்பான அனுபவத்தை பெற முடியும் என்பது குறித்து அழகாக பேசுகிறார். இவ்வாறு நிகழ்ச்சியானது மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது.

வாழ்க்கை பயணத்தை

வாழ்க்கை பயணத்தை

கோபம் தொடர்பான தனது சந்தேகங்களை ரவிசங்கர் முன் வைக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு பதில் அளித்து பேசும் பொழுது , கோபம் வராமல் தடுப்பதற்கு தியானமே சிறந்த வழி என்றும், அதை நாம் செய்யும்போது நமது உணர்ச்சிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றும் நமது மனம் சம நிலையில் இருக்கும் என்று கூறுகிறார். தியானம் செய்வதால் கிடைக்கும் பலன் குறித்தும் அவர் விளக்குகிறார். மேலும் தியானம் செய்தால் நமக்கு மன உறுதி கிடைப்பதோடு நமது வாழ்க்கை பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்றும் கூறுகிறார்.

ஞாயிறு ஒளிபரப்பு

ஞாயிறு ஒளிபரப்பு

வாழ்க்கை தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த வார நிகழ்ச்சியில் இடம் பெறுவதால் இது பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நம்புகின்றனர் . இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறுக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X