உடம்பை பார்க்கனும்.. கிளாமரான ஆடைகளை போட்டுட்டு வா.. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு நடந்த மோசமான சம்பவம்

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக இருக்கிறார். ஜனரஞ்சகமான படங்கள் தொடங்கி, ஆர்ட் ஃபிலிம் என்று வரையறுக்கப்படுகிற கதைக்கு முக்கியத்துவம் உள்ள யதார்த்த படங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான படங்களான வடசென்னை மற்றும் கனா என இரண்டு படங்களுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான மாநில விருதுக்கு தேர்வாகி உள்ளார். இதற்காக பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷும் கனா படத்திற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் வடசென்னை எனக்கு சர்ப்ரைஸ் தான் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது ஆரம்ப கால சவால்கள் குறித்தும் அதன் பின்னர் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் கிசுகிசுக்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

Aishwarya Rajesh Opens How Producer Forced to Her To Do Wear Glamour Dress For See Her Body Parts

மோசமான அனுபவம்: அவர் அந்த பேட்டியில், " என் எனது ஆரம்ப காலத்தில் வாய்ப்பு தேடிக் கொண்டு இருந்த போது, ஒரு தயாரிப்பாளரை சந்தித்து வாய்ப்பு கேட்க சென்றேன். அப்போது அந்த தயாரிப்பாளர் என்னை நோக்கி, போய் கிளாமரான உடைகள் அணிந்து கொண்டு வா, உனது உடம்பை பார்க்கனும். அதன் பின்னர் நான் முடிவெடுக்கிறேன்" என்று தெரிவித்தார் என்று கூறி உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வாறு தெரிவித்துள்ள கருத்தானது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கி உள்ளது. இது மட்டும் இல்லாமல் சில இணையவாசிகள், அந்த தயாரிப்பாளர் யார் என்று சொல்லுங்கள் என்றும் அவர் மீது வழக்கு போட்டு ஜெயிலில் தள்ளுங்க என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

புரளி: அதேபோல், எனக்கும் ஏதோ ஒரு தயாரிப்பாளரின் மகனுக்கும் திருமணம் நடக்கவுள்ளது என்று புரளியை கிளப்பி விட்டார்கள். நானும் அந்த தயாரிப்பாளர் மகனைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், பேட்டி எடுத்தவரோ, உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறுகிறார்களே என்று கேள்வி எழுப்ப, உடனே ஐஸ்வர்யா ராஜேஷோ, குழந்தைகள் பிறந்து விட்டதா? என்றும் அந்த திருமணத்திற்கு என்னையும் அழைத்திருக்கலாம் என்றும் சிரித்துக் கொண்டே பதில் அளிக்கிறார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X