ஹேராம் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு என்ன வேலை தெரியுமா ? சீக்ரெட் பாய்பிரென்ட் பற்றி ஸ்பெஷல் தகவல்

சென்னை : நடிகை லட்சுமியின் மகள், நடிகை ஐஸ்வர்யா பல படங்களில் தனித்துவமான நடிப்பினை கொடுத்திருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பலமொழிப்படங்களிலும் நடித்தவர். ராசுக்குட்டி, சுயம்வரம் போன்ற படங்களில் இவரின் நடிப்பு இன்னும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் நடித்த எஜமான் படத்தில் உரக்க கத்துது கோழி என்ற பாடல், இந்த லாக்டவுன் நேரத்

திலும் ட்ரெண்டிங் ஆகி, ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பை பெற்றது குறிப்படத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் இவற்றிலும் டிவி ஷோக்கள் நடத்தி தன் தனித்திறமையை வெளிப்படுத்தும் ஐஸ்வர்யாவின் மகளுக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் ஐஸ்வர்யா.

 நான் டீம் ப்ளேயர்

நான் டீம் ப்ளேயர்

கேள்வி : அம்மா லட்சுமி- மகள் ஐஸ்வர்யா. சினிமாவில் எப்படி ?

பதில் : சினிமவுக்குன்னே பொறந்தவங்க என் அம்மா லட்சுமி, அம்பிகா, சிவாஜி, ரஜினி ல்லாம். அவங்கல்லாம் லெஜண்ட்ஸ். மோசமான படம் மோசமான டீம்-ஆ இருந்தாலும் அந்த லெஜண்ட் ல்லாம் நேஷனல் அவார்ட், ஸ்டேட் அவார்ட் தட்டிட்டு போயிடுவாங்க. ஆனா நான் டீம் ப்ளேயர். டீம் நல்லா இருந்தாதான் என்னால ஸ்கோர் பண்ண முடியும்.

கேள்வி : கார்பரேட் காஸ்ட்யூம் ல இருந்தாலும் விபூதி வச்சிருக்கீங்களே..

பதில் : அது ஒரு ப்ரொடக்டிவ் சக்ரா மாதிரி.. பாபா டிவோட்டி நான். அதுனால வச்சிருக்கேன். அதுக்காக தீவிர சாமி பக்தை ல்லாம் இல்ல..

 காதலிக்கிற ஒரே ஆள்

காதலிக்கிற ஒரே ஆள்

கேள்வி : நீங்க யாரயாச்சும் காதலிச்சிருக்கீங்களா?

பதில் : பிரபுதான் என்னோட ரொம்ப பேவரிட். நான் காதலிக்கிற ஒரே ஆள் பிரபுதான். 16 வயசுலேர்ந்து அவரோட வெறித்தனமான ஃபேன். சுயம்வரம் படத்துல அவர் கூட பாவா பாவான்னு சொல்றப்பல்லாம் அப்படி ஒரு ஃபீல் இருந்துச்சு.அவர் தான் சீக்ரெட் பாய்பிரென்ட்என்று சொல்லி சிரித்தார் .

 ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்

ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்

கேள்வி : மறுபடி சீரியல், சினிமாக்களில் ஐஸ்வர்யாவை எப்போ பார்க்கலாம். ?

பதில் : நமக்குன்னு என்ன ப்ராப்தம் இருக்கோ அது நிச்சயமா கிடைக்கும், ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்ன்னு என் பாட்டி சொல்வாங்க. அததான் நான் ஃபாலோ பன்றேன். நிச்சயமா எனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். நல்ல சீரியல் கிடைச்சா, படங்கள் ல நல்ல டீம் கிடைச்சா, கண்டிப்பா செய்வேன் .டிவி ஷோ ல காம்பயர் பன்ற மாதிரி இன்னமும் நிறைய ஆசைகள் இருக்கு .

 ராணி முகர்ஜி-க்கு டப்பிங்

ராணி முகர்ஜி-க்கு டப்பிங்

கேள்வி : உங்களுக்கு டப்பிங் பேசினவங்கள் ல்ல யார ரொம்ப பிடிக்கும்?

பதில் : அனுராதா. எனகு பல படங்கள் ல டப்பிங் பேசிருக்காங்க. குஷ்புக்கு, கெளதமிக்கு ல்லாம் கூடபண்ணிருக்காங்க. அவங்க எப்புவுமே ஸ்பெஷல் .

கேள்வி : டப்பிங் அனுபவம் பற்றி..

பதில் : முதல்ல சுயம்வரம் படத்துல எனக்கு நானே டப்பிங் பேசி என் சொந்த குரல் பேசினேன். அப்பறம் ஹேராம் படத்துல ராணி முகர்ஜி-க்கு இங்லீஷ், தமிழ், தெலுங்கு மூனுக்கும் நான் தான் டப்பிங் பேசினேன். என்று சொல்ல ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகியது அந்த ஷாக்-லிருந்து வெளிவர. யாருக்கும் தெரியாத புதிய அனுபவங்களும், சில டயலாக்குகளையும் பேசிக்காட்டி மகிழ்வித்தார் பன்முக திறமையாளர் ஐஸ்வர்யா.கமலஹாசன் எப்படி இந்த டப்பிங் வாய்ப்பை கொடுத்தார் அதை எப்படி பக்காவாக செய்து கதாபாத்திரத்துக்கு மெருகு ஊட்டினார் ஐஸ்வர்யா என்று நிறைய சுவாரஸ்யங்களை வீடியோவில் காணலாம் .முழு வீடியோவையும் பிலிமிபீட் தமிழ் யுட்யூப் தளத்தில் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X