அழகை ரசி.. ஆபாசமாக ரசிக்காத.. அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து அதிரடியாக பேசிய ஐஸ்வர்யா வடிவு!
சென்னை: இன்ஸ்டாகிராமில் பிளாக் ஃபாரஸ்ட் ஐஸ்வர்யா எனும் ஐடியில் இருக்கும் இந்த மாடல் அழகி போல்ட் போட்டோஷூட் நடத்தி பிரபலமாகி வருகிறார். தனியாக ஆப் வைத்து நடத்தி வரும் இவர், அதற்கு தனியாக பணமும் வசூல் செய்து வருவதாக பேட்டியில் கூறியுள்ளார். மாடல் அழகியான ஐஸ்வர்யா வடிவு சினிமா படங்களில் நடிக்க முயற்சி செய்ததாகவும், அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை காரணமாக போல்ட் போட்டோஷூட் பக்கமே சென்று விட்டதாகவும் பேசி அதிர வைக்கிறார்.
தான் நிர்வாணமாக போட்டோக்களை போடுவதில்லை என்றும் ஆனால், ஓரளவுக்கு மேல் ஓவர் கிளாமரில் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வெளியிடாமல் தனியாக ஆப் ஆரம்பித்து வெளியிட்டு வருகிறேன் என்கிறார்.

இணையத்தில் திடீரென டிரெண்டாகி வரும் இளம் போல்ட் மாடல் ஐஸ்வர்யா வடிவு தொடர்ந்து சினிமாவில் நடிக்க போராடி வருவதாகவும், தனக்கு ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லைகளும், நிறம் காரணமாக நிராகரிக்கும் விஷயங்களும் ஏற்பட்டு வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆப் மூலம் சம்பாதிக்கும் நடிகைகள்: ஆரம்பத்தில் சன்னி லியோன் நடத்தி வந்த ஆப்பை ஏகப்பட்ட உலக ரசிகர்கள் டவுன்லோடு செய்து அவரது ஆபாச வீடியோக்களை பார்த்து ரசித்து வந்தனர். நடிகை கிரண் கூட ஆப் ஒன்றை வைத்திருப்பதாக அவரே கூறியுள்ளார். வாய்ஸ் கால், வீடியோ கால், போல்ட் போட்டோஸ் ஷேரிங் என ஒவ்வொன்றுக்கும் தனியாக நடிகைகள் பணம் வசூல் செய்து வருகின்றனர். அதே ரூட்டை தான் தற்போது ஐஸ்வர்யா வடிவும் செய்து வருகிறாராம்.
போல்ட் போட்டோஷூட்: கருப்பாக இருப்பதால் தன்னை சினிமாவில் பலரும் ஒதுக்கினார்கள். அதன் பின்னர் தான் போல்ட் போட்டோஷூட் நடத்தி பிரபலம் ஆகும் முடிவுக்கு வந்தேன். நான் வெளியிடும் போட்டோக்கள் நிச்சயம் இளைஞர்களை ஈர்க்கத்தான் செய்யும். அது ஹார்மோன் பிரச்சனை. அழகை ரசி, ஆனால் ஆபாசமாக ரசிக்காதே என்று தான் சொல்வேன் என படு போல்டாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
ஒன் நைட் ஸ்டாண்டுக்கு கூப்பிடுறாங்க: உள்ளாடை அணியாமல், ஆடைகளை அணிந்து பட்டன் எல்லாம் போடாமல் ரொம்பவே ஆபாசமாக போஸ் கொடுத்து வரும் ஐஸ்வர்யா வடிவுக்கு ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் வருவதாகவும் சோஷியல் மீடியாவில் மோசமான கமெண்ட்டுகள் குவிவதாகவும், டிரெஸை கழட்டி போஸ் கொடுக்கிற, ஒன் நைட் ஸ்டாண்டுக்கு வா என்றும் ஒரு நைட்டுக்கு உன் ரேட் என்ன என்றும் கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள் என்றும் புலம்பித் தீர்த்துள்ளார் ஐஸ்வர்யா வடிவு.
கண்ட இடத்தில் தொட்டார்கள்: சில மாடலிங் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, சில பிரபலங்களே தகாத இடத்தில் தொட்டுள்ளனர். உடனடியாக அவர்களது கையை தட்டி விட்டு அங்கிருந்து எல்லாம் ஓடி வந்து அழுதுருக்கிறேன். சில பெண்கள் தப்பான விஷயங்கள் செய்வதால் தான் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதே நோக்கத்துடன் தான் போல்ட் போட்டோஷூட் நடத்தினாலே தப்பானவள் தான் என்கிற எண்ணம் தோன்றி விடுகிறது என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











