twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யங் அம்மா ஐஸ்வர்யா தொடர்ந்து அம்மா கேரக்டர்களில் நடிக்கத் தயார் என்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா ராய் அல்ல.. லட்சுமியின்மகள் ஐஸ்வர்யா தான்.ஹீரோயினாக அறிமுகமானவர், கிளாமரில் ரணகளம் செய்து பார்த்தும் தமிழில் இவர் தேறவே இல்லை. இதனால்கன்னடம், தெலுங்கு என ரவுண்ட் அடித்தார். தெலுங்கில் இவரை நீண்ட காலம் முன்பே அக்கா கேரக்டருக்குக்கொண்டு போய்விட்டனர். கன்னடத்தில் மட்டுமே ஹீரோயினாக நடித்து வந்தார்.இப்போது அதுவும் இல்லை. இதனால் மலையாளத்துக்குப் பக்கம் அவ்வப்போது எட்டிப் பார்த்து வருகிறார்.சமீபத்தில் மலையாளத்தில் மாய மந்திரம் நிறைந்த காமசூத்ரா மாதிரியான ஒரு படத்தில் அந்த மாதிரியான ஒருரோலில் பின்னி எடுத்திருந்தார் ஐஸ். இதனால் அங்கு அதே ரகத்தில் சில படங்கள் கிடைத்தன.ஆனாலும் தென் மாநில சினி பீல்டுகளை எல்லாம் சுற்றி வந்ததில் ஐஸ்வர்யாவின் வயது தான் ஏறிவிட்டதே தவிர,எந்த பீல்டிலும் நிலைக்க முடியவில்லை. இந் நிலையில் தமிழில் அவருக்கு அம்மா கேரக்டர்கள் வர ஆரம்பித்துவிட்டன. முதலில் அதையெல்லாம்தவிர்த்துப் பார்த்தவர், இப்போது இளம் அம்மா கேரக்டராக இருந்தால் நடிக்க ரெடி தான் என்கிறார். ஆனால்,சத்யராஜுக்கு எல்லாம் அம்மாவாக நடிக்க சொன்னால் நோ தானாம்.இப்போ இருக்கிற ஹீரோயின்ஸ் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டால்,இப்ப வர்ற பொண்ணுங்க எல்லோருமே ரொம்ப புத்திசாலிங்க, தங்களோட கேரக்டர்லயிருந்து, போடுற டிரஸ்வரைக்கும் கவனமாக இருக்காங்க. நாங்க நடிச்ச காலத்தில் தலையில் ரிப்பனெல்லாம் கட்டிக்கிட்டு, டான்ஸ்பண்ணினோம். ஆனால் இப்போ அதையொல்லம் காணாம போச்சு (பல நடிகைகள் உடம்புல காஸ்ட்யூமேகாணாம போச்சே).நான் சதா, சிம்ரன், த்ரிஷான்னு நிறைய நடிகைங்க கூட நடிச்சுட்டேன். ஆனால் ஜோதிகா கூட மட்டும்நடிக்கவில்லை. ஜோதிகாவுடன் நடிக்க ரொம்ப ஆசையா இருக்கு. ஜோவுடைய வெகுளித்தனமான நடிப்புஎனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார். நான் ஹீரோயினா நடிச்சப்போ இருந்த சூழலை விட இப்போதைய சினிமா சூழல் நல்ல இருக்கு. எல்லோருமேநட்போட பழகுறாங்க. எனக்கு அம்மா ரோல்ல நடிக்குறது சுத்தமாக பிடிக்கல. நடிகர்களுக்கு அம்மாவாக நடிச்சாஅதை பார்த்து என் மகள் சிரிக்குறா.பின்னே என்னங்க என் பொண்ணுக்கே 11 வயசு தான் ஆகுது. அதுகுள்ள என்னை நடிகர்களோட அம்மாவாகநடிக்க சொல்லறங்க. யங் அம்மா ரோல் இருந்தா சொல்லுங்க நடிக்குறேன்னு டைரக்டர்ஸ் கிட்ட சொல்லிட்டேன்என்கிறார் ஐஸ்வர்யா.

    By Staff
    |

    தொடர்ந்து அம்மா கேரக்டர்களில் நடிக்கத் தயார் என்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா ராய் அல்ல.. லட்சுமியின்மகள் ஐஸ்வர்யா தான்.

    ஹீரோயினாக அறிமுகமானவர், கிளாமரில் ரணகளம் செய்து பார்த்தும் தமிழில் இவர் தேறவே இல்லை. இதனால்கன்னடம், தெலுங்கு என ரவுண்ட் அடித்தார். தெலுங்கில் இவரை நீண்ட காலம் முன்பே அக்கா கேரக்டருக்குக்கொண்டு போய்விட்டனர். கன்னடத்தில் மட்டுமே ஹீரோயினாக நடித்து வந்தார்.

    இப்போது அதுவும் இல்லை. இதனால் மலையாளத்துக்குப் பக்கம் அவ்வப்போது எட்டிப் பார்த்து வருகிறார்.சமீபத்தில் மலையாளத்தில் மாய மந்திரம் நிறைந்த காமசூத்ரா மாதிரியான ஒரு படத்தில் அந்த மாதிரியான ஒருரோலில் பின்னி எடுத்திருந்தார் ஐஸ். இதனால் அங்கு அதே ரகத்தில் சில படங்கள் கிடைத்தன.

    ஆனாலும் தென் மாநில சினி பீல்டுகளை எல்லாம் சுற்றி வந்ததில் ஐஸ்வர்யாவின் வயது தான் ஏறிவிட்டதே தவிர,எந்த பீல்டிலும் நிலைக்க முடியவில்லை.


    இந் நிலையில் தமிழில் அவருக்கு அம்மா கேரக்டர்கள் வர ஆரம்பித்துவிட்டன. முதலில் அதையெல்லாம்தவிர்த்துப் பார்த்தவர், இப்போது இளம் அம்மா கேரக்டராக இருந்தால் நடிக்க ரெடி தான் என்கிறார். ஆனால்,சத்யராஜுக்கு எல்லாம் அம்மாவாக நடிக்க சொன்னால் நோ தானாம்.

    இப்போ இருக்கிற ஹீரோயின்ஸ் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டால்,

    இப்ப வர்ற பொண்ணுங்க எல்லோருமே ரொம்ப புத்திசாலிங்க, தங்களோட கேரக்டர்லயிருந்து, போடுற டிரஸ்வரைக்கும் கவனமாக இருக்காங்க. நாங்க நடிச்ச காலத்தில் தலையில் ரிப்பனெல்லாம் கட்டிக்கிட்டு, டான்ஸ்பண்ணினோம். ஆனால் இப்போ அதையொல்லம் காணாம போச்சு (பல நடிகைகள் உடம்புல காஸ்ட்யூமேகாணாம போச்சே).

    நான் சதா, சிம்ரன், த்ரிஷான்னு நிறைய நடிகைங்க கூட நடிச்சுட்டேன். ஆனால் ஜோதிகா கூட மட்டும்நடிக்கவில்லை. ஜோதிகாவுடன் நடிக்க ரொம்ப ஆசையா இருக்கு. ஜோவுடைய வெகுளித்தனமான நடிப்புஎனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார்.


    நான் ஹீரோயினா நடிச்சப்போ இருந்த சூழலை விட இப்போதைய சினிமா சூழல் நல்ல இருக்கு. எல்லோருமேநட்போட பழகுறாங்க. எனக்கு அம்மா ரோல்ல நடிக்குறது சுத்தமாக பிடிக்கல. நடிகர்களுக்கு அம்மாவாக நடிச்சாஅதை பார்த்து என் மகள் சிரிக்குறா.

    பின்னே என்னங்க என் பொண்ணுக்கே 11 வயசு தான் ஆகுது. அதுகுள்ள என்னை நடிகர்களோட அம்மாவாகநடிக்க சொல்லறங்க. யங் அம்மா ரோல் இருந்தா சொல்லுங்க நடிக்குறேன்னு டைரக்டர்ஸ் கிட்ட சொல்லிட்டேன்என்கிறார் ஐஸ்வர்யா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X