Exclusive: 'தல' பர்த் டே..'அந்த காலத்துல அஜித்தோட கனவு வேறயா இருந்தது..' முதல்பட இயக்குனர்!
சென்னை: அந்த காலகட்டத்தில், அஜித்தின் கனவு வேறொன்றாக இருந்தது என அவர் ஹீரோவாக நடித்த முதல் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
'தல' அஜித்துக்கு இன்று 49 வது பிறந்த நாள். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைத் தெறிக்க விடுகிறார்கள், அவரது ரசிகர்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுனில் நாடு இருப்பதால், கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் கூறியிருந்தார்கள், அஜித் தரப்பில்.

டிரெண்டாகி வருகிறது
கேட்பவர்களா, புள்ளிங்கோஸ்..? சமூக வலைத்தளங்களில் வெறித்தனமாகக் கொண்டாடி வருகிறார்கள்.. நேற்றில் இருந்தே டிரெண்டாகி வருகிறது, அஜித் பிறந்தநாள் தொடர்பான இரண்டு மூன்று ஹேஷ்டேக்குகள். அஜித் ஹீரோவாக அறிமுகமானது 'அமராவதி' படத்தில். சங்கவி, தலைவாசல் விஜய், நாசர், சார்லி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு பாலபாரதி இசை அமைத்திருந்தார்.

அவருக்கே தெரிந்திருக்காது
செல்வா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் அஜித் நடித்தபோது, அவர் 'தல'யாக மாறுவாரா என்பது அவருக்கே கூட தெரிந்திருக்காது. அப்போதைய அவர் கனவெல்லாம் ரேஸில்தான் இருந்தது என்பார்கள். இயக்குனர் செல்வாவிடம், அஜித்தின் முதல்பட அனுபவம் பற்றிக் கேட்டோம். ''முதல் படம் பண்ணும்போது சினிமா மெயின் புரபெஷனா அஜித்துக்கு இல்லை. அவர் கனவு முழுவதும் வேற மாதிரி இருந்தது' என்று ஆரம்பித்தார் செல்வா.

அப்படி நினைக்கலை
''தான் ஒரு மிகப்பெரிய நடிகனா வரணும், ஸ்டாரா ஆயிடணும்னு நினைக்கலை, அவர். ஒரு நடிகர் வீட்டுக்குள்ள போனா, பல நடிகர்களோட போட்டோக்களை அவங்க வீடுகள்ல மாட்டி வச்சிருக்கிறதை பார்க்கலாம். ஆனா, அஜித் வீட்டுல வேற மாதிரி இருக்கும். அப்போ அஜித், ஆழ்வார்பேட்டையில இருந்தார்.

விதவிதமான பைக்
அவர் வீட்டுக்குப் போனா, அவர் அறையில விதவிதமான பைக்குகளோட போட்டோவாதான் இருக்கும். அவருக்கு எல்லாமுமா அதுதான் இருந்தது. அப்ப இப்படித்தான் இருந்தார். ரேஸ்தான் அவரோட கனவாவும் லட்சியமாவும் இருந்தது. அப்புறம் நடந்த விபத்துக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வரும்போது தனக்கான புரபெஷனா அதை மாத்திக்கிட்டார். இப்ப இவ்வளவு பெரிய வெற்றி அடைஞ்சிருக்கார்.

உழைப்பும் முயற்சியும்
எந்த விஷயத்தை கையில் எடுத்தா வெற்றி பெறலாம்னு தெரிஞ்சுகிட்டு தன்னை மாற்றினார் அஜித். அதற்காகக் கடுமையா உழைச்சிருக்கார். அந்த உழைப்பு, இந்த உயரத்துக்கு அவரை இப்ப கொண்டு வந்திருக்கு. இது கண்டிப்பா பாராட்டப்பட வேண்டிய விஷயம். நான் வேற லைன்ல, அவர் வேற லைன்ல போயிட்டாலும் அவர் வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்பட்டு கிட்டுதான் இருக்கிறேன். அதுக்குப் பின்னால அவரோட உழைப்பும் கடின முயற்சியும் இருக்கு' என்கிறார் செல்வா.


Click it and Unblock the Notifications











