சிவா தலைவர் மாதிரி இருக்காரா, 'தல' இருக்காராவா?: விஜய் ஹீரோயினை விளாசிய ரஜினி, அஜித் பேன்ஸ்
சென்னை: விஜய் பட நடிகையை அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் விளாசியுள்ளனர்.
நெஞ்சினிலே படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை இஷா கோபிகர் சுமார் 20 ஆண்டுகள் கழித்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. -14 படத்தின் மூலம் கோலிவுட் திரும்பியுள்ளார் இஷா.
சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிப்பது குறித்து இஷா கூறியிருப்பதாவது,

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைவுக்கு வருகிறார். சிவாவின் மேனரிசத்தால் அப்படி சொல்லவில்லை. அவர் வேண்டும் என்றே ரஜினியை காப்பியடிக்கிறார் என்றும் நான் கூறவில்லை. ஆனால் சிவாவை பார்த்தால் ரஜினியின் நினைவு வருகிறது.

பார்வை
ஒரு வேளை சிவகார்த்திகேயனின் தலைமுடி, முகம், நிறம், பார்க்கும் பார்வையால் இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு பிடித்த நடிகர் என்றால் அது அரவிந்த்சாமி தான். அவருடன் நான் நடித்துள்ளேன்.

விஜய்
அந்த காலத்தில் எனக்கு அஜித் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் இன்னும் நடிக்கிறாரா என்று தெரியவில்லை. அரவிந்த்சாமி தொடர்ந்து நடிக்கிறார், விஜய் டாப்பில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் இஷா.
ரசிகர்கள்
இஷா கோபிகரின் பேட்டியை பார்த்த ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் கோபம் அடைந்துள்ளனர். சிவகார்த்திகேயனை பார்த்தால் எங்க தலைவர் மாதிரி தெரியுதா என்று ரஜினி ரசிகர்களும், தல பற்றி தெரியாமல் தமிழ் படத்தில் நடிக்கிறீர்களா என்று அஜித் ரசிகர்களும் குமுறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











