GBU: AK குட் பேட் அக்லி படத்தின் FDFSக்கு வராரு.. ஃபைட் மாஸ்டர் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி..

சென்னை: அஜித் குமார் நடிப்பில் வரும் 10ஆம் தேதி அதாவது வரும் வியாழக்கிழமை வெளியாகவுள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இசையில் ஜி.வி. பிரகாஷ் குமார் சம்பவம் செய்துள்ளதால் படம் தியேட்டரில் தரமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். இப்படியான நிலையில், படத்தின் ஃபைட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் நமது ஃபிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி அளித்தார். அப்போது அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசும்போது, " நான் தமிழில் 140 படங்களுக்கு மேல் பணியாற்றிவிட்டு, மலையாளத்திற்கு சென்றேன். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் பணியாற்றி வருகிறேன். இந்தியிலும் அவ்வப்போது பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என முயற்சி எடுத்து சண்டைக் காட்சிகளை வடிவமைத்து வருகிறோம்.

Ajithkumar Good Bad Ugly Fight Master Supreme Sundar Exclusive Interview About FDFS

AK: விடாமுயற்சி படத்தில் அஜித் சாருக்கு அந்த காருக்குள் நடக்கும் சண்டைக் காட்சிகள், துணிவு படத்தில் 360 டிகிரிக்கும் கேமராவை செட் செய்து சண்டைக் காட்சிகளை எடுத்தோம். அஜித் சாரைப் பொறுத்தவரையில் படத்தின் வெற்றி தோல்வி எல்லாம் இரண்டாவது தான். அவர் முதன்மையான விஷயமாக கவனிப்பது, நீங்கள் மனத்தூய்மை கொண்டவராக இருக்கிறீர்களா இல்லையா என்பதுதான். அவருடன் பணியாற்றியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

Ajithkumar Good Bad Ugly Fight Master Supreme Sundar Exclusive Interview About FDFS

GBU: அவரே ஒருமுறை என்னிடம், மாஸ்டர் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் இருந்து எனது ஆக்‌ஷன் ஸ்டைல் மிகவும் மாறிவிட்டதாக எனது நண்பர்கள் கூறுகிறார்கள். எனக்கும் உங்களுடன் பணியாற்றுவது மிகவும் பிடித்துள்ளது எனக் கூறினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குட் பேட் அக்லி படத்தை பொறுத்தவரையில் ஆதிக் ரவிச்சந்திரன், தனக்கு என்ன மாதிரி ஸ்டண்ட் வேண்டும் என தீர்மானித்திருந்தார். குறிப்பாக ஸ்டண்ட் காட்சியை நாங்கள் பி.ஜி.எம். ஓடவிட்டு தான் படமாக்கினோம். ஆனால் டிரைலரில் ஒத்த ரூபா பாட்டை சேர்த்து வேற லெவலுக்கு உயர்த்தி விட்டார்.

Ajithkumar Good Bad Ugly Fight Master Supreme Sundar Exclusive Interview About FDFS

FDFS: அஜித் சார் குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு வருவாரா என்ற கேள்வி கேட்டதற்கு, அஜித் சார் இதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக் கூறினார். ஆனால் நான் சொல்கிறேன். அஜித் சார் குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு தியேட்டருக்கு வருகிறார் எனக் கூறினார். இவ்வாறு கூறிய சுப்ரீம் சுந்தர், சின்னதாக ஒரு கேப் விட்டுவிட்டு, ஸ்கிரீனில் வருகிறார். அவர் ஸ்கிரீனில் வரவில்லை என்றால் நீங்கள் படம் பார்க்க முடியாது எனக் கூறினார். இவரது இந்த பேச்சு நமது ஃப்லினி பீட் குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருந்தது. இவரது பேட்டியைப் பார்த்த ரசிகர்களும் இப்படி ஷாக் கொடுத்துட்டாரே மாஸ்டர் என கமெண்ட் அடித்து வருகிறார்கள். குட் பேட் அக்லி படத்திற்கான முன் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X