குக் வித் கோமாளி ஷோல வந்த எல்லாரும் ஹிட் ஆயிட்டோம்-ருத்ர தாண்டவம் நடிகை வெளியிட்ட சூப்பர் தகவல் !
சென்னை :விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ஷோ என்றால் அதில் குக் வித் கோமாளியும் அடங்கும், அதில் கலந்து கொண்ட அனைவரும் பேர் சொல்லும் அளவுக்கு பிரபலமாகிவிட்டனர்.
அஸ்வின்,ஷிவாங்கி,பாலா,தர்ஷா குப்தா போன்ற பலரும் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.அதில் தர்ஷா குப்தா நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ருத்ர தாண்டவம்.
ருத்ர தாண்டவம் திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளிவர தயாராக உள்ள நிலையில் ,படத்தில் மீது உள்ள எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து உள்ளது,அதற்கு காரணம் இப்படத்தின் இயக்குனர் தான்.ஏற்கனவே இவர் இயக்கிய படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளுள் குக் வித் கோமாளியும் ஒன்று.இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகி உள்ளனர். அஸ்வின்,ஷிவாங்கி,பாலா,தர்ஷா குப்தா என்று அனைவரும் திரைப்படங்களில் பிஸியாகி விட்டனர் .அதில் தர்ஷா குப்தா நடித்த ருத்ர தாண்டவம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.அதனால் இப்படத்திற்கான எதிர்பாப்பும் அதிகரித்து உள்ளது.

கர்ப்பிணியாக தர்ஷா
ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடிக்க,அவருக்கு ஜோடியாக தர்ஷா நடித்துள்ளார்.புடவை கட்டி கொண்டு கிராமத்து பெண் போல் இருக்கும் தர்ஷா,மேக் அப் அதிகமாக போடாமல் சாதாரணமாக நடித்து இருப்பது தான் முக்கியமான விஷயம்.கர்ப்பிணியாக நடிக்கும் போது கூட தனது எதார்த்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

சண்டை காட்சி
படத்தில் தனது கணவரான ரிச்சர்ட் ரிஷியுடன் சண்டை போடும் காட்சி தர்ஷா ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.ஏற்கனவே பல சீரியல்களில் நடித்த அனுபவம் உள்ளதால் அந்த காட்சிகள் அனைத்தையும் ஒரே டேக்கில் முடித்துவிட்டதாகவும்,தனக்கு இது முதல் படம் போல் தெரியவே இல்லை என்றும் சர்வ சாதாரணமாக கூறுகிறார் தர்ஷா.

நல்ல ஜோடி தர்ஷா
படத்தின் ட்ரைலர்,சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் ரிசார்ட் மற்றும் தர்ஷா ஜோடி இந்த படத்தில் சூப்பராக உள்ளது என்றும் நெட்டிசன்ஸ் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.இந்த படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி ,ஏற்கனவே இயக்கிய படங்கள் அனைத்தும் பல சர்ச்சைகளை சந்தித்த நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.
கவர்ச்சி வேண்டாம்
பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் தர்ஷாவுக்கு, கவர்ச்சி என்றால் கொஞ்சம் அலர்ஜியாம்.அடுத்து சன்னி லியோன் படத்தில் நடிக்கும் தர்ஷா , கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றும்,தனக்கு கவர்ச்சி ஒத்து வராது என்றும் கூறியுள்ளார்.ஜாதி,மதம்,போல பல வசனங்களும்,படத்தில் கெளதம் மேனன் பேசும் வசனங்களும் இப்படத்தின் ஹை லைட்.


Click it and Unblock the Notifications











