ஆல் ஈஸ் வெல்! - 'தெளிந்த' நயன்தாரா
நடந்ததெல்லாம் நன்மைக்கே என எடுத்துக் கொள்கிறேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
மூன்று காதல் முறிவுகளைக் கண்டவர் நயன்தாரா. இப்போது லேட்டஸ்ட்டாக பிரபுதேவாவுடன்.
இப்போது எல்லாவற்றையும் மறந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ் படங்களில் பெரும் சம்பளத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தனது இப்போதைய நிலை குறித்து ஹைதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டி:
தொடர்ந்து நிறைய பிரச்சினைகளை சந்தித்துவிட்டேன். கஷ்டங்களை அனுபவித்தேன். அவை என்னை பக்குவப்படுத்தி என்ன வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மனதிடத்தை அளித்துள்ளது. இனி எதற்கும் நான் கலங்க மாட்டேன். எதையும் தாங்கும் திடம் வந்துவிட்டது.
பெரியவர்கள் என்ன நடந்தாலும் எல்லாம் நல்லதுக்குத்தான் என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கோம். அது என் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. நானும் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நல்லதற்கே என எடுத்துக் கொண்டேன்.
நடிப்பு என் மூச்சு. இதோ மீண்டும் வந்து விட்டேன். வாழ்க்கை இப்போ நல்லா இருக்கு. நல்ல, பெரிய வாய்ப்புகள் வருகின்றன.
சிறு வயதில் கஷ்டம் தெரியாமல் ரொம்ப செல்லமா வளர்ந்தேன். இப்போ தேவையில்லாமல் பிரச்சினைகளில் மாட்டி அவதிப்பட்டேன். என் தவறுகளைப் புரிந்து கொண்டேன். துன்பங்களை மறக்க பழகி விட்டேன். பிரச்சினைகளை எதிர்த்து போராடும் திறமை இல்லாவிட்டாலும் அவற்றில் இருந்து தப்பிக்க வழி தெரிய வேண்டும்.
திரிஷாவுடன் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவே இல்லை," என்றார் நயன்தாரா.


Click it and Unblock the Notifications












