படமெடுக்க ஆசை.. மக்கள் மனசை தொடணும்.. நெருடக் கூடாது.. அம்பானி சங்கர் அதிரடி!

சென்னை : எனக்கு படம் எடுக்க ஆசை, மக்களின் மனநிலை உணர்ந்து படம் எடுப்பேன் என்று காமெடி நடிகர் அம்பானி சங்கர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் அம்பானி சங்கர் நிறைய காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர். இவர் அஜித்தின் ஜீ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். வடிவேலு மற்றும் கருணாஸ் உடன் அதிகபடியான காமெடி படங்களில் நடித்து சிரிக்க வைத்திருக்கிறார்.

இவருக்கு அம்பானி சங்கர் என்று பெயர் வர காரணம் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் இவருக்கு அம்பானி சங்கர் என்று பெயர் வந்தது .

 அஜீத் ரசிகன்

அஜீத் ரசிகன்

அம்பானி சங்கர் சமீபத்தில் திரௌபதி படத்திற்காக கொடுத்த பேட்டியில் ஆரம்ப காலத்தில் இருந்தே திரௌபதி பட நாயகன் ரிச்சார்ட் ரிஷியை எனக்கு தெரியும் நாங்கள் இணைந்து நடித்துள்ளோம் என்று கூறினார். மேலும் ஜீ படத்தில் நடிப்பதற்கு முன்பிலிருந்தே நான் அஜித் ரசிகன் தான் படத்தில் நடித்த பின் பெரிய ரசிகனாக மாறிவிட்டேன் என கூறினார் .

 அஜீத்துக்கு சூப்பர் மனசு

அஜீத்துக்கு சூப்பர் மனசு

அஜித்தின் குணாதிசயம் பற்றி கூறிய அம்பானி சங்கர் ஜீ படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு ரசிகர் கெஞ்சி, அஜித்துக்கு கை கொடுக்க ஆசைபட்டாராம் அவரிடம் அஜித் உங்களுக்கு நான் கை கொடுத்தால் அனைவருக்கும் கை கொடுக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் அவர்கள் மனம் புண்படும் என்று கூறி அந்த ரசிகரை அனுப்பினார். அது எனக்கு மனம் கவர்ந்த நிகழ்வு என்று அம்பானி சங்கர் கூறினார் .

 வடிவேலுவுடன் அதகளம்

வடிவேலுவுடன் அதகளம்

மேலும் இவர் வடிவேலு உடன் சிறந்த நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார். தற்போது உள்ள இயக்குனர்களின் பாணி வேறு வடிவேலுவின் பாணி வேறு, வடிவேலு படப்பிடிப்பின் போது அந்த நேரத்திற்கேற்ற வசனங்களை பேசி அசத்திவிடுவார். முன்னதாக ஏதும் வசனங்களை படித்து விட்டு வரமாட்டார் என்று கூறினார். தற்போது அம்பானி சங்கர் படம் இயக்க போகிறார்.

 இயக்குநர் அவதாரம்

இயக்குநர் அவதாரம்

அதை பற்றி அம்பானி சங்கர் கூறுகையில் தற்போது எனக்கு படம் இயக்கும் ஆசை வந்திருக்கிறது. அதனால் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து இயக்குனராக அடிதட்டு அமைத்து வருகிறேன் கூடிய விரைவில் இயக்குனராவேன். மக்கள் தற்போது கமர்ஷியல் படங்களை அதிகம் விரும்புவது இல்லை. மனதிற்கு நெருக்கமாக நெருடல் இல்லா படங்களை தான் எதிர்பார்க்கிறார்கள். அதை போல நானும் படம் இயக்க உள்ளேன் என்று கூறியுள்ளார் அம்பானி சங்கர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X