»   »  4 பேரு, 7 நாளு!

4 பேரு, 7 நாளு!

Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகி பிரியாமணியை 4 பேர் சேர்ந்து கற்பழிக்கும் காட்சியை ஒரு வாரமாக படமாக்கியதாககூறியுள்ளார் இயக்குநர் அமீர்.

பருத்தி வீரன் மூலம் படு பிரபலமாகியுள்ளார் அமீர். அடுத்த பாரதிராஜா என்ற புதுப் பெருமையும் அவருக்கு வந்து சேர்ந்துள்ளது. படத்தின்ஒவ்வொரு காட்சியும் அக்கக்காக அலசப்பட்டு விவாதங்கள் வெளிக் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

அதில் ஒரு விவாதம், உச்சகட்ட கற்பழிப்புக் காட்சியை சற்றே ஆக்வர்ட் ஆக படமாக்கி விட்டார் அமீர் என்பது. ஆனால் அது அறுவெறுப்பானகாட்சி அல்ல என்கிறார் அமீர்.


அமீரின் கருத்து இதுதான்:

பருத்தி வீரன், முத்தழகு ஆகிய கதாபாத்திரங்களின் ஆரம்ப கட்ட இயல்பை சொன்ன நான், ஒரு கட்டத்தில் அவர்கள் என்ன ஆகிறார்கள்என்பதைத்தான் அந்தக் கற்பழிப்புக் காட்சியில் சொல்லியுள்ளேன்.

பிரியாமணியை 4 பேரும் கற்பழிப்பதான காட்சியில் எந்த வக்கிரமும் இருப்பதாக தெரியவில்லை. உண்மையில் அந்த நான்கு பேரும்பிரியாமணியை தொடாமலேயே நடித்தனர்.

முதலில் பிரியாமணி தொடர்பான காட்சிகளை தனியாக எடுத்தேன். பின்னர் அந்த நான்கு பேரும் பிரியா மணி மீது படுத்துக் கற்பழிப்பது போன்றகாட்சியை தனியாக எடுத்தேன். இதில் எங்கே வக்கிரம் வருகிறது?

வழக்கமாக காதலனும், காதலியும் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்வது மாதிரியோ அல்லது வில்லனை நாயகன் வெட்டித் தள்ளி விட்டுசிறைக்குப் போவது மாதிரியோ எடுத்திருந்தால் அது வழக்கமான கிளைமாக்ஸ் ஆகியிருக்கும்.

அரண் படத்திலும், பாண்டிட் குயீன் படத்திலும் எடுக்கப்பட்ட கற்பழிப்புக் காட்சிகள்தான் உண்மையில் வக்கிரமானவை, பயங்கரமானவை.

அதேபோல, எனது படத்தின் நாயகன் பருத்தி வீரன், படிப்பறிவே கிடையாத, சொல் புத்தி, சுய புத்தி என எதுவும் இல்லாத பட்டிக்காட்டான்.அவனுக்கு என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாது. அவன் வில்லனை கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டதில் என்ன தவறு? அந்தகேரக்டருக்கு அவன் அப்படித்தான் செய்வான்.

பிரியாமணி கற்பழிப்புக் காட்சியை நான் கிட்டத்தட்ட 7 நாட்கள் கஷ்டப்பட்டு எடுத்தேன். அந்தக் காட்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு இருப்பது போலத்தெரியவில்லை. மாறாக பலரும் பாராட்டவே செய்துள்ளனர் என்கிறார் அமீர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil