கமலை ஓரம் கட்டிய அமிதாப் பச்சன்.. சர்வாதிகாரி போல நடந்து கொண்டார்.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: கமல்ஹாசன் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்தால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என பயந்த அமிதாப் பச்சன் அவரை ஹிந்தியில் வளரவிடாமல் ஓரம் கட்டினார் என்று மருத்துவரும் அரசியல் விமர்சகருமான டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில், இந்தியில் கமல் நடித்த ஏக் தூஜே கே லியே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனால், கமலைப் பார்த்து அபிதாப் பச்சன் பயந்தார். கமல் பாலிவுட்டுக்கு வந்தால், தனது மார்க்கெட் குறைந்துவிடும் என நினைத்த அவர், இந்திக்கு கமல்ஹாசன் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இதனால், என்னென்ன வேலை செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து கமலின் வளர்ச்சியை தடுத்தார் அபிதாப் பச்சன்

Amitabh Bachchan Kamal Kantharaj

கமலை ஓரம் கட்டினார் அமிதாப்: சென்னையில் ஒரு இந்தி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அந்த இடத்தில் கமலை பார்ப்பதற்காக நான் சென்றேன். அப்போது, ஶ்ரீதேவி, அமிதாப் பச்சனும் இருந்தார்கள். நான் கமலிடம் என்ன படம் என்று கேட்டேன். இந்தி படம், அமிதாப் தான் ஹீரோ நான் செகண்ட் ஹீரோ, ஹீரோயின் ஸ்ரீதேவி என்று சொன்னார். பேசிக்கொண்டிருந்த போது திடீரென நான், என்னையே அறியாமல் கமலிடம் இந்த படம் வெளிவராது என்று சொல்லிவிட்டேன். நான் சொன்னது போலவே, அந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதாவது, கமலை வைத்து படம் எடுத்தால் அந்த படம் ட்ராப்பாகி விடும், கமல் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்தவர் என்கிற நெகட்டிவ் இமேஜை இந்தி சினிமாவில் உருவாக்கினார்கள்.

Amitabh Bachchan Kamal Kantharaj

சர்வாதிகாரி போல இருந்தார்: அடுத்து, அந்தா கானுன் படத்தில் ரஜினியை நடிக்க வைத்தார்கள். ரஜினி நடித்த அந்த படம் நன்றாக சென்றது. ஆனால், ரஜினி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். அன்றைய காலகட்டத்தில் இந்தி சினிமாவில் அமிதாப் பச்சன் ஒரு சர்வாதிகாரி போல இருந்தார். அமிதாப் பச்சன் நடித்த படம் ஒன்று சரியில்லை என பத்திரிகை ஒன்று விமர்சனத்தை வெளியிட்டது. ஆனால், அடுத்த நாளே தவறுதலாக அந்த விமர்சனத்தை வெளியிட்டதாக பத்திரிகை நிறுவனம் மன்னிப்பு கேட்டது. அந்த அளவிற்கு அமிதாப் பச்சனுக்கு சினிமா பின்னணியும் அரசியல் பின்னணியும் இருந்தது.

Amitabh Bachchan Kamal Kantharaj

அமிதாப் பயந்தார்: அதே போல, இந்தியில் பாரதி ராஜா இயக்கிய 16 வயதினிலே , கிழக்கே போகும் ரயில் ஆகிய இரு படங்களை வெளியிட விடாமல் செய்தார்கள். 16 வயதினிலே படத்தை இந்தியில் வெளியிட்டார்கள். ஆனால், அந்த படத்தை வெளியிட திரையரங்குகளை கிடைக்கவிடாமல் இழுத்தடித்தார்கள். தமிழில் வெற்றி பெற்ற அந்த படத்திற்கு ஒரே ஒரு தியேட்டரில் மார்னிங்ஷோவில் மட்டுமே திரையிடப்பட்டது. கிராமிய படங்கள் வந்தால் அமிதாப் பச்சன் படங்களுக்கு வரவேற்பு கிடைக்காது என்று அப்படி செய்தார். இந்திக்கு பாரதி ராஜா வருவதையும், கமல் வருவதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இல்லை. கமலின் ஏக் தூஜே கே லியே திரைப்படம் எதிர்பாராத விதமாக வெளியாகி வெற்றி பெற்றுவிட்டதால், அமிதாப் பச்சனின் பல ரசிகர் மன்றங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால், அமிதாப் பச்சன் பயந்து இதுபோன்ற வேலைகளை செய்தார். அன்றைய காலகட்டத்தில் கமலால் இதை எதிர்க்க முடியவில்லை என்று காந்தராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X