twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்லப்பா மற்றும் கட்டப்பா என்ற பட்டங்களை அம்மு அபிராமி இவர்களுக்கு வழங்கினார்..யார் அந்த இருவர் ?

    |

    சென்னை: குக் வித் கோமாளி நடுவர் செஃப் தாமு அவர்களுக்கு செல்லப்பா என்ற பட்டமும், வெங்கடேஷ் பட் அவர்களுக்கு இனிமையான கட்டப்பா என்ற பட்டமும் வழங்க ஆசைப்படுவதாக அசுரன் பட நடிகை அம்மு அபிராமி தெரிவித்தார்.

    லாக்டவுனுக்கு பிறகு சினிமா இன்ட்ஸ்ட்ரி இன்னும் சரியான நிலைமைக்கு வராததால், தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

    மார்ச் 16ம் தேதி அவரது "போகாதே" ஆல்பம் பாடல் வெளியாகியுள்ள நிலையில், நமது பிலிம்பீட் வினாத்துக்கு அம்மு அபிராமி அளித்த சிறப்பு பேட்டி இங்கு பார்க்கலாம்

     அழகான வலி எது தெரியுமா?

    அழகான வலி எது தெரியுமா?

    கேள்வி: உங்களுடைய மறக்கமுடியாத பிறந்த நாள் எது?

    பதில் : என்னுடைய 18வது பிறந்த நாள் மறக்க முடியாது. ஏனென்றால் எனது அப்பா மிகப்பெரிய பார்ட்டி வைத்து கொண்டாடினார். தற்போது மார்ச் 16ம் தேதி வந்து சென்ற பிறந்த நாளும் ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் என்னுடைய "போகாதே" ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.

     எனது நாய் இறந்தது ஒரு வலி

    எனது நாய் இறந்தது ஒரு வலி

    கேள்வி: உங்கள் பிறந்தநாளன்று, பிரிவை மையமாக வைத்து வெளியாகியுள்ள "போகாதே" ஆல்பம் பாடல் என்ன நினைக்கிறீங்க?

    பதில்: நாம் எல்லோரும் மலைப்பகுதி என்றால் கொடைக்கானல், ஊட்டி தான் செல்வோம். வால்பாறை ரொம்ப அழகான மலைப்பகுதியாகும். போகாதே ஆல்பம் பாடல் அனைத்தும் வால்பாறையில் டீ எஸ்டேட்டில் அனுமதி வாங்கி ஷூட் நடத்தினோம். இந்த பாடலில் ஒளிப்பதிவாளர் என்னை அழகாக காட்டியிருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளருக்கும், இயக்குனர் ரஞ்சித்க்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த ஆல்பம் பாடல் காதலர்களுக்கு இடையே நடக்கும் பிரிவை மட்டும் குறிப்பதில்லை. நாம் யார் மீது அன்பு, பாசம் செலுத்துகிறோமோ அவர்களை பிரியும் போது ஏற்படும் வலியை உணர்த்துவதாகும். இந்த பாடல் ஒரு தனி உணர்வை வரவழைக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு அழகான வலி, சுகமான வலி. என்னை பொறுத்தவரை எனது நாய் இறந்தது ஒரு வலி தான். வார்த்தைகளால் சொல்ல முடியாத பெயின்.

     ரம்யா டீச்சர்

    ரம்யா டீச்சர்

    கேள்வி: உங்களது பள்ளி பருவம் குறித்து...

    பதில்: எனக்கு கணித ஆசிரியை ரம்யா அவர்களை ரொம்ப பிடிக்கும். ரொம்ப அமைதியானவர். இனிமையாக பழகக்கூடியவர். எத்தனை முறை கணிதத்தில் சந்தேகம் கேட்டாலும், முகம் சுளிக்காமல் சொல்லி தருபவர். குழந்தை பருவத்திலிருந்து சித்து, மோனிஷ் ஆகிய இரண்டு பேரும் எனது நண்பர்கள். மோனிஷ் தான் என்னை இன்று வரை கலாய்த்து கொண்டு தான் இருக்கிறான். உன்னையெல்லாம் இப்படி பார்க்க வேண்டியிருக்கிறது என்பான்.

     தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கை

    கேள்வி: வெள்ளித்திரையிலிருந்து குக் வித் கோமாளியில் பங்கேற்பது எப்படி சாத்தியம்?

    பதில் :வெள்ளித்திரை, சின்னத்திரை என்பதை பிரித்து பார்க்கும் அளவுக்கு நான் வளரவில்லை. குக் வித் கோமாளியில் பங்கேற்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னை சார்ந்தவர்கள் எல்லாரும் நன்றாக செய். எந்த சூழ்நிலையிலும் வெளியே வந்து விடாதே என்று ஊக்கப்படுத்துகிறார்கள். குக்வித் கோமாளியில் உள்ள 10 போட்டியாளர்கள் ரொம்ப திறமையானவர்கள். போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவது என்பது, அந்த நேரத்தில் அவர்களின் சமையல் சொதப்பினால் மட்டுமே நடக்கும். குக் வித் கோமாளி மூலம் நான் கற்றுக் கொண்டது, என்னால் தனியாக சமைத்து வாழ முடியும் என்ற தன்னம்பிக்கை உருவாகியுள்ளது.

    செஃப் தாமு அவர்களும், பட் அவர்களும் எனது இரண்டு கண்கள். செஃப் தாமு அவர்களுக்கு செல்லப்பா என்ற பட்டமும், பட் அவர்களுக்கு இனிமையான கட்டப்பா என்ற பட்டமும் வழங்குகிறேன். இவர்கள் இருவரும் எங்களை திட்டுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. சமைப்பது எங்கள் தொழில். நடிப்பது உங்கள் தொழில். எங்கள் தொழிலை மதித்து இங்கு வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி என்றனர்.

     மிகப்பெரிய மைல்கல்

    மிகப்பெரிய மைல்கல்

    கேள்வி: அசுரன் படத்திற்கு பிறகு உங்களுக்கு சரியான வாய்ப்பு வரவில்லை. ஏன்?

    பதில் : அசுரன் படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய மைல் கல். என்னை நாலு பேர் நல்ல பார்ப்பதற்கு காரணம் அந்த படம் தான். அந்த படத்தில் நடித்ததற்குரிய அங்கீகாரமும், மரியாதையும் எனக்கு கிடைத்துள்ளது. அதை தக்கவைத்துக் கொள்வேன். இந்த படத்திற்கு பிறகு லாக்டவுன் வந்தது. சினிமா இன்ட்ஸ்ட்ரியும் அந்தளவுக்கு சரியாக இல்லை. எனவே எனக்கு வாய்ப்பு வரவில்லை என்பதை இந்த சூழ்நிலை பொறுத்து ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிரித்தபடி கூறினார் .

     அழகான மாற்றம்

    அழகான மாற்றம்

    கேள்வி: தற்போது வந்துள்ள படங்களில் உங்களுக்கு பிடித்தது?

    பதில் : ஒடிடியில் வெளியான முதலும் நீ, முடிவும் நீ. இளமைப்பருவத்தை அழகாக காட்டியிருப்பார்கள். நம்முடைய வாழ்க்கையை திரும்ப பார்க்க வைத்திருப்பார்கள். இந்த படத்தில் சைனீஸ் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். காதலை வெளிப்படுத்தும் விதம் அருமை.

    கேள்வி: உங்களிடம் யாராவது காதலை வெளிப்படுத்தியுள்ளாரா?

    பதில் : பள்ளி பருவத்தில் ஒருவர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அவரது பெயரை வெளியிட மாட்டேன். அது சஸ்பென்ஸ். பள்ளிபருவத்தில் நானும் கண்ணாடி அணியிருந்தேன். தற்போது நமது முகத்தில் அழகான மாற்றம் ஏற்பட்டிருப்பது சந்தோஷம் என்றார்.

     கண்ணை அழகாக காட்டிய அவர்கள்

    கண்ணை அழகாக காட்டிய அவர்கள்

    கேள்வி: உங்களது கனவு என்ன?

    பதில் : முதன்முதலில் எனது கண்ணை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கும், இனி நான் நடிக்க போகும் படங்களில் அழகாக காட்ட இருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நடிகர் அருண்விஜய் நடிக்கும் யானை படத்தில் நடித்துள்ளேன். விதவிதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார்.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/zVJLsWr6qkw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் அம்மு அபிராமி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள் .

    English summary
    குக் வித் கோமாளி நடுவர் செஃப் தாமு அவர்களுக்கு செல்லப்பா என்ற பட்டமும், வெங்கடேஷ் பட் அவர்களுக்கு இனிமையான கட்டப்பா என்ற பட்டமும் வழங்க ஆசைப்படுவதாக அசுரன் பட நடிகை அம்மு அபிராமி தெரிவித்தார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X