twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் என்ன நடிகனா இல்ல அரசியல்வாதியா.. எல்லாத்துக்கும் கருத்து சொல்ல: அர்விந்த் சாமி அதிரடி பேட்டி!

    நடிப்பது மட்டுமே ஒரு நடிகனின் வேலை என நடிகர் அர்விந்த் சாமி தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை : எல்லா பிரச்சினைகளுக்கும் கருத்து சொல்ல தான் ஒன்றும் அரசியல்வாதி அல்ல என நடிகர் அர்விந்த் சாமி தெரிவித்துள்ளார்.

    மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த 'தளபதி' படம் மூலம் அறிமுகமானவர் அர்விந்த சாமி. ரோஜா, பாம்பே, ஹிட் படங்களில் நடித்த அவர் நடுவில் சினிமாவைவிட்டு ஒதுங்கி இருந்தார்.

    பின்னர் சில ஆண்டுகள் கழித்து, கடல் படம் மூலம் ரீஎண்ட்ரியானார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில் இந்தியா டுடே பத்திரிகை நடத்திய மாநாட்டில் நடிகர் அர்விந்த் சாமி கலந்துகொண்டார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

    அவன் விவரம் வருமாறு:

    சினிமா மாறிவிட்டது

    சினிமா மாறிவிட்டது

    தற்போது சினிமா நிறைய மாறிவிட்டது. குறிப்பாக பார்வையாளர்கள் மத்தியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிகிறுது. அதேபோல் படம் எடுப்பதும் இப்போது சுலபமாகிவிட்டது. என்னுடைய பசங்க ஐபோனை வைத்துக்கொண்டு படம் எடுக்கிறார்கள். பிலிம் மேக்கிங்கில் இருந்த மர்மம் விலகிவிட்டது. இப்போது வரும் இளம் இயக்குனர்களுக்கு பார்வையாளர்களுக்கு என்ன தர வேண்டும் என்பது தெரிவிந்திருக்கிறது.

    நடிகனின் வேலை

    நடிகனின் வேலை

    நடிப்பது மட்டுமே ஒரு நடிகனின் வேலை. அவனிடம் இருந்து அரசியலை நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரை தேவை என்றால் மட்டுமே ஒரு விஷயம் குறித்து நான் கருத்து தெரிவிப்பேன். ஒரு விஷயம் தவறு என நான் நினைத்தால் மட்டுமே அது பற்றி நான் பேசுவேன். ஆனால் நான் அரசியல்வாதி அல்ல. அரசியல்வாதிகள் கொண்டு வரும் கொள்கைகள் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்தே என் கருத்து இருக்கும்.

    தீர்வு தர முடியாது

    தீர்வு தர முடியாது

    நான் ஒரு நடிகன். என்னால் கவனத்தை ஈர்க்க மட்டுமே முடியும். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த முடியாது. ஆனால் கருத்து சொல்ல வேண்டும் என மக்கள் ஏன் எதிர்பார்க்கிறார்கள்.

    குற்றச்சாட்டு கூறும் முன்

    குற்றச்சாட்டு கூறும் முன்

    ஒருவரை பற்றி குற்றச்சாட்டு முன் வைக்கும் போது அதுகுறித்து நிறைய தகவல்களை அறிந்திருக்க வேண்டும். அதுவரை அது மற்றவர்களுடைய கருத்து தான். ஆனால் ஒருவரை பற்றி புகார் கூறிய நபருக்கு எதிராக அணிதிறல்வது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய செயல் அல்ல. அவர்களை தண்டிப்பது என்பது தவறான விஷயமாகும்."

    English summary
    "An actor's job is to act. Why should we expect them to be in politics? I do express my views though, if I feel the need to", asks actor Arvind Swami while speaking in India today conclave 2018.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X