‘’ஆட்டோகிராஃப் 2’’ நிச்சயம் வரும்… இயக்குனர் சேரனின் ஸ்பெஷல் நேர்காணல் !

சென்னை : நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்தி, சேரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

Recommended Video

Anandham Vilayadum Veedu | Cheran நடிக்கணுமா - இதான் கண்டிஷன் | Filmibeat Tamil

இத்திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சேரன் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

ஆனந்தம் விளையாடும் வீடு

ஆனந்தம் விளையாடும் வீடு

கேள்வி : ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் இத்தனை வருடங்களுக்கு பிறகு நடித்துள்ளீர்கள்.. அதைப்பற்றி சொல்லுங்க?

பதில் : தேசியகீதத்திற்கு பிறகு நடிகர் முரளியை வைத்து எடுக்க நினைத்த திரைப்படம் தான் ஆனந்தம் விளையாடும் வீடு. அண்ணன் தம்பி கதை தான். அது இன்னும் எடுக்கப்படவில்லை. நானும் அமீரும் கூட பண்ணலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.ஆனால் எங்களால் பண்ண முடியல என்றார். அதே தலைப்பை என்னிடம் சொல்லும் போது என் மனதிற்குகள் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது என்றார்.

ஜீவிதாவின் மகள்

ஜீவிதாவின் மகள்

கேள்வி : ஜீவிதாவின் மகள் இப்படத்தில் நடித்துள்ளார் அவர் பற்றி சொல்லுங்க ?

பதில் : இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது,ஷிவத்மிகா புகைப்படத்தை பார்த்தேன். யாரு இந்த பொண்ணு , நம்ம ஊரு மீனாட்சி கல்லூரியில் படித்த பொண்ணு போலவே இருக்கிறார் என்று அவரை தேர்வு செய்தேன். அப்போது தான் அது ஜீவிதாவின் மகள் என்பது தெரிந்தது உடனே, நான் ஒகேனு சொல்லிவிட்டேன் என்றார்.

குடும்ப படங்கள் குறைவு

குடும்ப படங்கள் குறைவு

கேள்வி : விசுவிற்கு பிறகு குடும்ப திரைப்படங்கள் வெளியாவது குறைத்துவிட்டதா?

பதில் : நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள், நிறைய யோசிக்கிறார்கள். ஆனால், இங்கு வியாபாரம் தான் ஒரு திரைப்படத்தை தீர்மானிக்கிறது. ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதே போன்ற திரைப்படத்தைத்தான் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் கேட்கிறார்கள்.ஆனந்தம் விளையாடும் வீடு வெற்றிக்குப்பிறகு குடும்ப திரைப்படங்கள் நிறைய வெளிவரும் என்றார்.

ஆட்டோகிராஃப் 2 வரும்

கேள்வி : ஆட்டோகிராஃப் பார்ட் 2 வருமா?

பதில் : காலம் கடந்து போய் விட்டது... இருந்தாலும் ஆட்டோகிராஃப் 2 நிச்சயம் வரும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X