என்ன பாவம் செய்தார்.. அவருக்கு இப்படி ஒரு மரணமா.. ஆனந்த கண்ணன் மனைவி கண்ணீர் பேட்டி!

சென்னை: '90' கால கட்டத்தில் தொலைகாட்சிகளில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜேவாக பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைகாட்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கும், தொகுத்து வழங்கி வந்த ஆனந்த கண்ணன், சிந்துபாத், விக்ரமாதித்யன், உள்ளிட்ட தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக தொலைகாட்சிகளில் தலைகாட்டாமல் இருந்து வந்த ஆனந்த கண்ணன் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையல், 2021ம் ஆண்டு உயிரிழந்தார்.

ஆனந்த கண்ணனின் மனைவி ராணி, Tele Vikatan சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் மறைவில் இருந்து என்னால் மீண்டு வரவே முடியவில்லை, அவருக்கு புற்றுநோய் இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஏதாவது, கேஸ்டிக் பிரச்சனையாக தான் இருக்கும் என்று அதற்கான மாத்திரைகளை எடுத்து வந்தார். ஆனால், அப்போதும், வயிற்றில் தொந்தரவு இருந்ததால், மருத்துவரை அணுகி எண்டோஸ்கோஃபி கூட செய்து பார்த்தோம். அப்போதும் தெரியவில்லை. அதன் பின் சில நாட்கள் கழித்து அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. எப்படியாவது அவரை காப்பாற்றி விடலாம், அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாவது செய்து விடலாம் என பலவகையில் நாங்கள் போராடினோம். ஆனால் அதற்கெல்லாம் பலன் அளிக்காமல் திடீரென ஒரு நாள் இறந்துவிட்டார்' இப்படி நடக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எப்படியாவது அவரை காப்பாற்றி விடலாம் என நினைத்திருந்தோம்.

Anandha Kannan wife interview
Photo Credit:

ஆனந்த கண்ணன் மனைவி: அவர் இல்லை என்றாலும் அவருடைய நினைவுகளுடன் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். யாராவது கணவரை பற்றி கேட்கும் பொழுதும், அவர் இருந்த அறையை பார்க்கும் போதும் தான் எனக்கு அவர் இறந்துவிட்டார் என்று தோன்றுகிறது. மற்றபடி அவர், சிங்கப்பூரில் வேலை பார்த்து கொண்டு இருக்க்கிறார் என நினைத்து தான் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். அவர் நினைவை விட்டு என்னால் அகலவே முடியவில்லை. என் கணவருக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லை, உடலை நன்றாக கவனித்துக்கொள்வார். யாரையும் அவர் கஷ்டப்படுத்தி கூட ஒரு வார்த்தை பேசமாட்டார். அவருக்கு ஏன் கடவுள் இப்படி ஒரு மரணத்தை கொடுத்தார். அடுத்தவர்களை கெடுப்பவர்கள், பிறருக்கு துரோகம் செய்பவர்கள் எல்லாம் இருக்கும் போது என் கணவருக்கு ஏன் இந்த நிலைமை என்று நான் பலமுறை கடவுளிடம் கேட்டிருக்கின்றேன்.

தைரியமா இருங்க: பெண்களுக்கு கணவர் இறந்துவிட்டாலோ, இல்லை விவகாரத்து ஆகிவிட்டாலோ தயவு செய்து யாரிடமும் உதவியை எதிர்பார்த்து நிற்காதீர்கள். உங்கள் காலிலேயே நில்லுங்கள் உங்களால் எல்லாத்தையும் செய்ய முடியும் என்று நம்புகள் என்றார். கண் மூடித்தனமாக யாரையும் நம்பால், உங்கள் மீது முழு நம்பிக்கையை வையுங்கள், எந்த கஷ்டம் வந்தாலும் பாத்துக்கலாம் என்ற மன தைரியத்தோடு இருங்கள், உயிர் இருக்கும் வரை எதையும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து வாழுங்கள், இதை கற்றுக்கொடுத்தது கூட என் கணவர் தான் என்றார். தொடர்ந்து பேசிய ராணி, என் மகளும் அப்பா போல மீடியாவிலேயே இருக்கிறாள். இரண்டு சீரியல்களில் நடித்து வருகிறாள் தொகுப்பாளராகவும் இருக்கிறார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X