நடிகர் ராம்கி இப்படி பட்டவரா? யாருக்கும் தெரியாத ரகசியத்தை போட்டுடைத்த பெப்சி உமா !

சென்னை : 1990களில் மிகப் பிரபலமாக கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ராம்கி. இவர் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பல்வேறு மொழிகளில் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தமிழில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ள ராம்கி இடையில் சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படங்களிலும் தோன்றாமல் இருந்தது பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருந்தது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளர் இருந்த பெப்சி உமா. ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை போட்டு உடைத்துள்ளார் இந்த வீடியோ தற்போது மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

நடிகர் ராம்கி தமிழில் சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு இவர் செந்தூரப்பூவே, இணைந்த கைகள்,பாஸ் மார்க், வனஜா கிரிஜா, மாயா பஜார் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

ஆச்சரியத்தில்

ஆச்சரியத்தில்

தமிழ் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பரிச்சயமான இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். மேலும் இவரின் ஹேர் ஸ்டைல் இன்றும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இதில் அன்று முதல் இன்று வரை ஹேர் ஸ்டைலில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

மீண்டும் கம் பேக்

மீண்டும் கம் பேக்

இவ்வாறு தனது தனித்துவத்தால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ராம்கி 6 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மாசாணி மற்றும் பிரியாணி போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் கம் பேக் கொடுத்தார்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

இவ்வாறு சூப்பர் கம் பேக் கொடுத்த ராம்கி தற்போது மீண்டும் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டு வருகிறார். மாசாணி பிரியாணி படங்களை தொடர்ந்து தமிழில் ஆக்சன், வாய்மை, அட்டி போன்ற படங்களிலும் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100, டிஸ்கோ ராஜா போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார்.

சுவாரஸ்யமான

சுவாரஸ்யமான

இப்போது இருக்கும் லாக்டவுன் சூழலில் நடிகர் ராம்கி சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொலைகாட்சிக்கு கொடுத்த நேர்காணல் ஒன்று மீண்டும் ஒளிபரப்பப் பட்டுள்ளது. அதில் தொகுப்பாளினி பெப்சி உமா நடிகர் ராம்கியிடம் கேட்ட கேள்விகளுக்கு நமக்குத் தெரியாத இவரைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிழ்ச்சியுடன்

மகிழ்ச்சியுடன்

இந்த நிகழ்ச்சியில் பெப்சி உமாவுடன், நடிகர் ராம்கி, நடிகர் விவேக் மற்றும் மாசாணி படத்தின் தயாரிப்பாளர் என பலரும் கலந்துகொண்டு தங்களது திரையுலக அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

சிறுவயது முதலே

சிறுவயது முதலே

இதில் குறிப்பாக நடிகர் விவேக்குடன் இணைந்து உரையாற்றும்போது நடிகர் ராம்கி ஒரு நல்ல நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த ஜோதிடர் என்று யாருக்கும் தெரியாத உண்மையை வெளியே கூறியுள்ளார். இதை கேட்ட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் ராம்கி சிறுவயது முதலே ஜோதிடத்தில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டு அதை முறையாக கற்று கைதேர்ந்தவர் என்ற உண்மையை இந்த நேர்காணல் மூலம் போட்டு உடைத்தனர்.

போட்டு உடைத்தனர்

போட்டு உடைத்தனர்

அதுமட்டுமல்லாமல் நடிகர் ராம்கி அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதை எப்படியாவது வெளியாகிய சில நாட்களிலேயே வாங்கிவிடுவாராம். அந்த அளவுக்கு புது புது எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என நமக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்திருந்தார்.

வாயடைத்துப் போயுள்ளனர்

வாயடைத்துப் போயுள்ளனர்

இப்போது இந்த நேர்காணல் நிகழ்ச்சியைப் பார்த்த அனைவரும் இதற்க்கு முன் இவரை ஒரு நடிகராக மட்டும் பார்த்து வந்த நிலையில் பலரும் ராம்கி இப்படிப்பட்டவரா என வாயடைத்துப் போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X