ஷாலினியை விட நான் சின்னவ.. ஆனா எனக்கு அக்கா ரோல்.. ஸ்வர்ணமால்யா கலகல பேட்டி !
சென்னை : பிரபலமான தொகுப்பாளர் மற்றும் நடிகை, பல்வேறு மேடைகளை கண்ட பரதநாட்டிய கலைஞர் என பல்வேறு முகங்களை கொண்டு தமிழ் ரசிகர்களின் அன்புக்கு சொந்தக்காரர் நடிகை ஸ்வர்ணமால்யா.
Recommended Video
மிகச் சிறிய வயதிலேயே பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்த ஸ்வர்ணமால்யா, பரதநாட்டியத்தில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத் துறைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்வர்ணமால்யா, சமீபத்தில் பேட்டி ஒன்றில் அலைபாயுதே திரைப்படத்தை பற்றி கலகலப்பான பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

தனித்துவமான தொகுப்பாளராக
தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது பன்முக நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஸ்வர்ணமால்யா. சன் டிவியில் ஒளிபரப்பான "இளமை புதுமை" இளமை துள்ளலான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் பிரபலமான பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு தனித்துவமான தொகுப்பாளராக வெற்றி வலம் வந்தார்.

ஷாலினிக்கு அக்கா
தொகுப்பாளராக மிகப் பிரபலமாக வலம் வந்த ஸ்வர்ணமால்யா, மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். அழகான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவான அலைபாயுதே திரைப்படத்தில் ஷாலினிக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்வர்ணமால்யாவை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

டிவி நெடுந்தொடர்களிலும்
அலைபாயுதே திரைப்படத்திற்கு பிறகு மேலும் பிரபலமான ஸ்வர்ணமால்யா, தமிழில் மட்டுமல்லாமல் கன்னட மற்றும் மலையாள மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். அலைபாயுதே திரைப்படத்திற்கு பிறகு எங்கள் அண்ணா, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, யுவா, மொழி, பெரியார் என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்வர்ணமால்யா அதேசமயம் பிரபலமான பல டிவி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார்.

சுவாரஸ்யமான விஷயங்கள்
இவ்வாறு ரசிகர்கள் இன்றளவும் ஸ்வர்ணமால்யாவை திரைப்படங்களை வாயிலாகவோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வாயிலாக பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்வர்ணமால்யா அதில் தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஷாலினி பள்ளியில் என்னோட சீனியர்
அலைபாயுதே திரைப்படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி தொகுப்பாளர் கேட்டதற்கு, பூரிப்புடன் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட ஸ்வர்ணமால்யா, அலைபாயுதே திரைப்படத்தில் நடிக்கும்போது தான் ஷாலினியை விட 4 வயது சின்ன பொண்ணு எனவும், ஷாலினி பள்ளியில் என்னோட சீனியர், ஆனால் அலைபாயுதே திரைப்படத்தில் என்னை ஷாலினிக்கு அக்காவாக நடிக்க வைத்துவிட்டார்கள் என்ற சுவாரசியமான தகவலை கலகலப்பாக அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











