»   »  அதுக்கு டாட்டா காட்டும் அங்கீதா

அதுக்கு டாட்டா காட்டும் அங்கீதா

Subscribe to Oneindia Tamil

அங்கீதா புத்தாண்டில் ஒரு புது முடிவு எடுத்துள்ளாராம். அதாவது கிளாமருக்குடாட்டா காட்டி விட்டு கலக்கல் கேரக்டர்களில் நடிக்கப் போகிறாராம்.

ரஸ்னா பேபி அங்கீதா வயசுக்கு வந்ததும் அப்படியே சினிமாவுக்கு வந்து விட்டார்.லண்டன் படத்தில் தலை காட்டிய அவர் தகதிமிதா என இன்னொரு படத்திலும்இளமை விருந்து படைத்தார்.

இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்ததும் டகாலென தெலுங்குக்குத் தாவினார்.அங்கேயும் கவர்ச்சிப் பாயை வி>த்து கல்லாக் கட்டினார். அங்கீதாவின் கவர்ச்சிக்குதமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்க கடையை அங்கேயேநிரந்தரமாக்கி விட தீர்மானித்தார்.

ஆனால் அவரது நேரமோ, என்னவோ த்ரிஷாக்களும், இலியானாக்களும்,நயனதாராக்களும் உள்ளே புகுந்து அவரது ஆட்டத்தைக் கலைத்து விட்டனர்.

அப்செட் ஆகிப் போன அங்கீ, மறுபடியும் தமிழுக்குத் திரும்பினார். அவருக்குஆதரவுக் கரம் நீட்டியது ஸ்ரீரங்கா (இப்போது திரு ரங்கா என பெயரை மாற்றிவிட்டனர்) யூனிட். இப்படத்தில் அங்கீதா கவர்ச்சி களேபரம் செய்துள்ளாராம்.

படம் முழுக்க அங்கீதாவின் அங்க அவயங்கள் அட்டகாச ஆட்டம் ஆடியுள்ளதாம்.விரைவில் வெளிவரப்போகும் இப்படத்தின் மூலம் மறுபடியும் பிசியாகி விடுவோம்என்ற அபார நம்பிக்கையில் உள்ளார் அங்கீதா.

அந்த சூட்டோடு இந்த புத்தாண்டில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாராம்அங்கீதா. அதாவது உடம்பை மேலும் பளபளப்பாக்க யோகா செய்யப் போகிறாராம்.

அப்படியா என்று அங்கீயிடம் கேட்டால், ஆமா, உடம்பும், மனசும்தான் எங்களோடமூலதனம். இரண்டும் நல்லா இருந்தாத்தான் செய்யும் கேரக்டர்களைஇன்வால்வ்மென்ட்டோடு செய்ய முடியும்.

மனசு நல்லா இருந்தால்தான் உடம்பும் நாம் சொல்வதை கேட்கும். அதனால்தான்யோகாவில் முழு மூச்சாக இறங்க தீர்மானித்தேன். 1ம் தேதி முதல் தினசரி யோகாகிளாஸுக்குப் போகப் போகிறேன்.

யோகாவுக்கு எந்தவித தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து செய்யப் போகிறேன்என்கிறார்.

இன்னொரு முக்கியத் தீர்மானம்தான் ரசிகர்களுக்கு சங்கடமான ஒரு செய்தி. அதாவதுஇனிமேல் கிளாமர் ரோல்களை செய்யப் போவதில்லையாம். ஏம்ப்பா இப்படி என்றுஏக்கத்தோடு கேட்டால், கவர்ச்சிக்கு டாட்டா காட்டப் போகிறேன்.

நல்ல நல்ல ரோல்களாக பார்த்துப் பார்த்து நடிக்கப் போகிறேன். வித்தியாசமானஅங்கீதாவை இனிமேல் ரசிகர்கள் பார்ப்பார்கள். ஸோ, இனிமேல் நோ கவர்ச்சி, நோகுத்தாட்டம், நோ கிளாமர் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார் அங்கீதா.

அங்கீதாவுக்கு இது புத்துணர்வான தீர்மானம். ஆனால் ரசிகர்களுக்கோ படுஏமாற்றமான செய்தி.

கவலைப்படாதீங்க, புத்தாண்டு தீர்மானங்களுக்கு ஆயுசு கம்மி என்பார்கள். அதுஅங்கீதாவுக்கும் பொருந்தலாம், யார் கண்டது?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil