என் குரு விஜய் தான்.. அனபெல் சேதுபதி பட இயக்குநர் ஓப்பன் டாக்.. வைரலாகும் வீடியோ!

சென்னை: விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி உள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் நாளை மதியம் 12.30 மணிக்கு ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

Recommended Video

A. L. Vijay கிட்ட சினிமா கத்துக்கிட்டேன் | Director Deepak Sundarrajan | Filmibeat Tamil

இயக்குநரும் பிரபல குணசித்ர நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் அனபெல் சேதுபதி படத்தின் பிரஸ்மீட்டில் அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த வாரம்

கடந்த வாரம் விஜய்சேதுபதி நடிப்பில் லாபம் மற்றும் துக்ளக் தர்பார் என இரு படங்கள் வெளியாகின. லாபம் திரைப்படம் தியேட்டர்களிலும் துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவி மற்றும் நெட்பிளிக்ஸிலும் வெளியானது. இந்நிலையில், இந்த வாரம் விஜய்சேதுபதியின் அனபெல் சேதுபதி படம் நாளை வெளியாகிறது.

அனபெல் சேதுபதி

அனபெல் சேதுபதி

காமெடி பேய் படமாக உருவாகி உள்ள அனபெல் சேதுபதி படம் நாளை மதியம் 12:30 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். விஜய்சேதுபதி, டாப்சி, யோகி பாபு, ஜகபதி பாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, மதுமிதா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.

மகனையும் ஆதரிங்க

மகனையும் ஆதரிங்க

பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா, காலமெல்லாம் காத்திருப்பேன் என ஏகப்பட்ட படங்களை இயக்கிய இயக்குநரும் குணசித்ர நடிகருமான சுந்தர்ராஜன் பிரஸ் மீட்டில் பேசும் போது எனக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் எப்படி ஆதரவு கொடுத்தீர்களோ அதே போல மகனுக்கும் ஆதரவு கொடுங்க என கோரிக்கை வைத்தார்.

நான் நடிக்கவில்லை

நான் நடிக்கவில்லை

மகன் தனது முயற்சியால் எப்படி சினிமாவில் சாதிக்கிறான் என்பதை காண காத்திருக்கிறேன். அதனால், தான் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. படத்தின் கதை மற்றும் தயாரிப்பாளர் யார்? உள்ளிட்ட எந்த கேள்வியையும் இதுவரை நான் கேட்கவில்லை. டிரைலரையே இங்கே வந்து பார்த்த போது தான் ஆச்சர்யப்பட்டேன் எனக் கூறினார்.

டைட்டில் மாற்றம் ஏன்

டைட்டில் மாற்றம் ஏன்

இயக்குநர் தீபக் சுந்தர்ராஜனிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பட்டாசு போல அவர் பதிலளித்தார். அனபெல் சுப்பிரமணியம் என்கிற டைட்டிலை அனபெல் சேதுபதி என ஏன் மாற்றினீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர் இரண்டு தலைப்புகளும் ஆலோசனையில் இருந்தது. இந்த படத்தில் மன்னன் வீரசேதுபதி எனும் பெயரில் தான் விஜய்சேதுபதி நடித்துள்ளார். அதனால், அனபெல் சேதுபதி டைட்டிலே கச்சிதமாக பொருந்த அதையே வைத்து விட்டோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X