மொட்டை தலையுடன் கோலங்கள் சீரியல் ஆனந்தி.. இவங்களுக்கு இப்படி ஒரு மனசா.. மஞ்சரியால் நெகிழ்ந்த பேன்ஸ்!

சென்னை: கோலங்கள், அண்ணாமலை போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை மஞ்சரி தற்போது மொட்டை தலையுடன் இருப்பதைப்பார்த்து ரசிகர்கள் உடைந்து போன நிலையில், இதற்கான காரணத்தை கேட்டு, இந்த மனசுதான் கடவுள் என வாழ்த்தி வருகின்றனர்.

பிரபல சின்னத்திரை நடிகை யான மஞ்சரி, உறவுகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மனதில் தனக்கு என்று தனி ரசிகர்களை வைத்து இருந்தார். இதைத்தொடர்ந்து, ராதிகா சரத்குமார் இயக்கிய அண்ணாமலை, கோலங்கள், அலைகள் போன்ற மெகா ஹிட்டான சீரியல்களில் நடித்ததன் மூலம் மஞ்சரி பிரபலமானார்.

annamalai manjari

நடிகை மஞ்சரி: தென்னிந்தியாவில் அதிக சீரியல்களில் நடித்த நடிகை என்ற பெருமை இவருக்கு உண்டு. அவர் தமிழ் அதுமட்டுமில்லாது பிற மொழி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சீரியல்களில் பிஸியாக நடித்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டு சீரியலை விட்டு விலகினார். இவர் தற்போது சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டதாகவும், அங்கு ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

மொட்டை தலையுடன்: தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை மஞ்சரியை பார்த்த ரசிகர் வேதனை அடைத்தனர். அதன்பின் அவர் கூறிய காரணத்தை கேட்டு அவரை பாராட்டி வருகின்றனர். அதாவது அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் முடியை தானமாக கொடுத்துள்ளார். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோ தெரப்பி கொடுக்கும் போது அவர்களுக்கு முடிகள் உதிர்ந்து விடும். இதனால். அவர்களுக்கு விக் செய்ய தனது முடியை தானமாக கொடுத்ததாக கூறி இருந்தார்.

கடுப்பா இருக்கு: மேலும், இப்போது சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் இதே தலையுடன் தான் நடிப்பேன் என்று கண்டீசன் போட்டுத்தான் நடிப்பேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இப்ப உள்ள சீரியல்கள் எல்லாம் மிகவும் அருவையாக இருக்கிறது.பார்க்கவே முடியவில்லை, சீரியலில் அனைவரும் பட்டுப்புடவை, புல் மேக்கப், நகையுடன் வலம் வருகின்றனர். இப்ப உள்ள சீரியல்களில் எல்லா நடிகைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் அப்படி இருக்க மாட்டார்கள். எதார்த்தமே இல்லாமல் இருக்கிறது என்று நடிகை மஞ்சரி அந்த பேட்டியில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X